Thursday, November 27, 2008

திருமணத்துக்கு முன் யோசியுங்கள்

திருமணத்துக்கு முன் யோசியுங்கள் *

அது மனநோயாளிகளின் மருத்துவமணை * தயாள குணம் படைத்த செல்வந்தர் ஒருவர், தன் பிறந்த தினத்தை மருத்துவமணை நோயாளிகளுக்கு உணவளித்துக் கொண்டாடுவதற்காக ஒரு நாள் அங்கு வருகிறார்.

மருத்துவமணையின் ஊழியர்கள் அவரை உள்ளே அழைத்துக் கொண்டு போகிறhர்கள். வழியில், மின் விசிறியின் மேலிருந்து ஒரு நோயாளி... லைலா, லைலா என்று கத்தியபடி தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறான் *

ஒன்றும் இல்லை, இவன் லைலா என்ற பெண்ணை உயிருக்குயிராகக் காதலித்தான். அவள் இவனை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவனைத் திருமணம் செய்துகொண்டதால், மனநோயாளியாகி விட்டான் என்று அங்கிருந்த ஊழியர்கள் சொல்கிறார்கள்.

செல்வந்தர் அவனைத் தாண்டிக் கொண்டு வேறு ஓர் அறைக்குப் போகிறார். அங்கேயும் ஒருவன், லைலா, லைலா, என்று அழுதபடி அங்கிருந்த மின் விசிறியில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறhன்.

இவனுக்கு என்ன?

ஊழியர்கள் சொன்னார்கள் இவன்தான் அந்த லைலாவைக் கல்யாணம் செய்து கொண்டவன் *

நகைச்சுவைக்காகப் புனையப்பட்ட கதைதான் இது என்றாலும் இன்று சிலருடைய காதல் - திருமண வாழ்க்கை ஏன் திருப்தி தரும் வகையில் இருப்பதில்லை என்பது ஆராயப்பட வேண்டிய விஷயமல்லவா?

முக்கியமாகத் திருமண வாழ்க்கை *

இதற்கு மிக மிக அடிப்படையான காரணம் ஒன்று உண்டு * அதாவது திருமணம் செய்து கொண்டால் சந்தோஷம் வரும் என்று நினைக்கிறோம். அது தவறு எப்படி?

விளக்கு என்பது வெளிச்சம் கிடையாது, கட்டடங்கள் எல்லாமே வீடாகி விடாது. அலமாரியில் இருக்கும் புத்தகம் அறிவு என்று ஆகிவிடாது. மருந்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலே நோய் குணமாகிவிடாது *

குடிவந்தால் அது வீடு... புத்தகத்தை எடுத்துப் படித்தால்தான் அறிவு. மருந்தைக் குடித்தால்தான் நிவாரணம்.

அதுபோல்தான் திருமணம் வாழ்க்கை, பார்த்ததும் பிடிக்கிற ஒரு பெண்ணை அல்லது ஆணைத் திருமணம் செய்து, தன் அருகில் வைத்துக் கொண்டுவிட்டாலே சந்தோஷம் வந்து விடுவதில்லை. கணவனும் மனைவியும்வேறு வேறு பாதைகளில், வேறுவேறு விருப்பங்களுடன் இருந்தால், மண வாழ்க்கை வெற்றி பெறாது ஒருத்தரை ஒருத்தர் தங்கள் வெற்றிக்கு அவர்கள் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

ஆனால், திருமணமும் சந்தோஷமும் ஒன்று என்று நினைத்துக் கல்யாணம் செய்து கொள்கிறவர்கள் திருமணத்தில் சந்தோஷத்தைத் தேடுகிறார்கள். எதிர்பார்த்த சந்தோஷம் அங்கு இல்லாதபோது ஏமாந்து போகிறார்கள் * திருமணம் என்பதும் விளக்கு மாதிரிதான். கணவனும் மனைவியும் சேர்ந்து அதை ஏற்றினால்தான் சந்தோஷம் என்ற வெளிச்சம் வரும். *

என்னைத்தேடி சில சமயம் காதல் வயப்பட்டவர்களும் வருவார்கள் * சென்ற மாதம் என்னுடைய ஆசிரமத்துக்கு ஓர் இளைஞன் வந்தான் * அவன் சொன்னான். சுவாமி நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். அவளைக் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன் *

ஏன்?- சுருக்கமாகவே கேட்டுவிட்டு அவனைப் பார்த்தேன்.

படிப்பும் இருக்கிறது * அவளின் அப்பாவும் காரில் போகிற அளவுக்கு வசதியானவர். அவளை நான் கல்யாணம் செய்து கொண்டால் எனக்குச் சுலபமாகச் சந்தோஷம் கிடைக்கும் *

அவன் தன்னுடைய காதலியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்து ஆசிரமத்தின் வராந்தாவில் உட்கார வைத்திருந்தான். அவனது காதலியை உள்ளே அழைத்து வரச் சொன்னேன்.

அவளிடம் இதே கேள்வியைக் கேட்டேன்.

நீ ஏன் இவனைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறhய்?

என் காதலர் நாகாpகமானவர்.. பண்புடையவர். நகைச்சுவை உணர்வும் நிறைய இருக்கிறது. கடுமையான சொந்த உழைப்பால் சீக்கிரத்திலேயே முன்னுக்கு வந்து விடுவார். ஆகமொத்தத்தில் அவரால் எனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்க முடியும் *

மேலோட்டமாக இந்த ஜோடியை யார் பார்த்தாலும் "Made for each other" பட்டம் கொடுத்து விடுவார்கள் * ஆனால், எனக்கு மட்டும் இவர்கள் இதே மனநிலையில் திருமணம் செய்து கொண்டால், திருமண வாழ்க்கையில் முழுமையாகச் சந்தோஷம் அடைய மாட்டார்கள் என்று பட்டது * அவர்கள் இருவருக்கும் சொன்ன சில கருத்துக்களை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்குச் சந்தோஷத்தைப் பிச்சை போடு * என்று காதலியிடம் கை நீட்டும் காதலனும்.. இல்லை .. நீதான் என்னைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று காதலனிடம் கை நீட்டும் காதலியும் திருமணம் செய்து கொண்டால் என்ன நடக்கும்? சந்தோஷத்தைப் பிச்சை எடுக்கும் ஒரு பிச்சைக்காரனால், இன்னொரு பிச்சைக்காரனுக்கு எப்படி சந்தோஷத்தை தானமாகக் கொடுக்க முடியும்?

ஆகவே, திருமணப் பந்தலுக்குள் அடியெடுத்து வைக்கும் மணமக்களே.. உங்களைக் கைப்பிடிக்கப் போகிறவர் எப்படி உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பார் என்று யோசிக்காதீர்கள் அவருக்கு நீங்கள் எப்படி சந்தோஷம் கொடுக்கப் போகிறீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

சாதாரணமான ஒரு பொருளையே எடுத்துக் கொள்ளுங்கள் * ஒரு பொருளைப் பரிசாகப் பெறுவதில் நமக்கு ஒரு மடங்கு சந்தோஷம் கிடைக்கிறது என்றால், ஒரு பொருளை மற்றவர்களுக்குப் பரிசாகக் கொடுப்பதில் நமக்குக் கிடைக்கும் சந்தோஷம் அதைவிடப் பல மடங்கு இல்லையா?

ஈத்துவத்துக்கும் இன்பம் பற்றி திருவள்ளுவர் சொல்லியிருப்பதை என்னைப் போல ஆங்கில மொழிபெயர்ப்பில் படிக்காமல், நேரடியாக தமிழிலேயே படிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் நீங்கள் அதனால் இது பற்றி உங்களுக்கு அதிகமாகச் சொல்லத் தேவையில்லை. ஆகவே. கணவன் - மனைவி இடையே ஏற்படக் கூடிய அடுத்த பிரச்னைக்கு போகிறேன்.

No comments: