Thursday, November 27, 2008

மனசுக்குள் ஒரு சூனியக்காரி

மனசுக்குள் ஒரு சூனியக்காரி *
உங்களில் பலருக்கு ரஃபன்சல் கதை தெரிந்திருக்கும். அவள்
மாபெரும் அழகி பிறந்தவுடனேயே இவளைச் சூனியக்காரி ஒருத்தி,
பெற்றோர்களிடமிருந்து அபகரித்துப் போய்க் காட்டிலே உள்ள
கோட்டைக் கோபுரத்தில் சிறை வைத்துவிட்டாள். படிக்கட்டுகளோ,
கதவுகளோ இல்லாத அந்த உயரமான கோபுரத்தில் ஜன்னல் மட்டும்
உண்டு *
வெளி உலகத்தையே பார்க்காமல் ரஃபன்சல் வளர்கிறாள்.
பொன்நிறத்தில் மிக நீளமான கூந்தல் * ரோஜாவோடு போட்டி போடும்
அளவுக்கு நிறம்.. . ஆனால், ரஃபன்சலுக்குத் தான் இப்படி ஒரு
பேரழகியாக இருக்கிறேhம் என்பதே தெரிந்துவிடக்கூடாது என்பதில்
சூனியக்காரி கவனமாக இருந்தாள். தான் அழகி என்று தெரிந்தால்
தன்னம்பிக்கை வந்து, எங்கே தப்பித்துப் போய்விடுவானோ என்ற
எண்ணத்தில், ரஃபன்சலை அடைத்து வைத்திருந்த கோபுரத்தில் ஒரு
கண்ணாடிச் சில்லுகூட வைக்கவில்லை அந்தச் சூனியக்காரி *
குரங்கு மாதிரி இருக்கிற இந்த முகத்தை வைத்துக்கொண்டு என்
முன்னாடி வந்து நிற்காதே.. . என்று சூனியக்காரி பொழுது விடிந்து
பொழுது சாயும்வரை ரஃபன்சலைத் திட்டி தீர்ப்பாள். இதை
ரஃபன்சலும் உண்மை என்று நம்பி, ஐயையோ. .. ஆண்டவன்
என்னை இப்படி அவலட்சணமாகப் படைத்துவிட்டானே .. . என்று
நினைத்து வேதனைப்பட்டு அழுது கொண்டே இருப்பாள்.
ஒரு நாள் காட்டுக்கு வேட்டையாட வந்த இளவரசன், அந்தக்
கோபுரத்தின் ஜன்னலில் தெரிந்த ரஃபன்சலின் முக அழகைப் பார்த்து,
அவள்மேல் காதல் கொள்கிறhன் * ஒரு நாள் சூனியக்காரி கொஞ்சம்
கண்ணயர்ந்த நேரம்.. . இளவரசன் கோபுரத்துக்கு அருகே சென்று
ரஃபன்சலைப் பார்த்துத் தனது காதலை வெளிப்படுத்தினான்.
உலகிலேயே உன்னைப் போலப் பேரழகி கிடையாது * உன் முடியைப்
போலப் பொன்நிறமான நீள முடி யாருக்குமே இல்லை.. . என்று
அவன் புகழ, தான் அவலட்சணம் இல்லை.. . தான் நிஜமாகவே அழகி
- பேரழகி என்பதை வாழ்க்கையில் முதல்முறையாக ரஃபன்சல்
உணர்கிறhள். பிறகு இருவரும் பலமுறை சந்தித்துக் கொள்கின்றனர்.
கடைசியில், ரஃபன்சலின் நீண்ட முடியையே கயிறு மாதிரி கீழே
விடச் சொல்லி அதன் வழியாகக் கோட்டையின் உச்சிக்குப் போய்
சூனியக்காரியை வீழ்த்திவிட்டு இளவரசன், ரஃபன்சலைக் கோபுரச்
சிறையிலிருந்து மீட்டுத் திருமணம் செய்து கொண்டான். பிறகு, நீண்ட
நாள் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று இந்தக் கதை
முடிகிறது *
சரி * இப்போது எதற்கு நான் இந்த கான்வென்ட் கதையைச்
சொல்கிறேன். . ? கதையின் காரணத்தைச் சொல்வதற்கு முன்னால்,
கிரியேட்டிவிட்டி பற்றி நாம் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை இங்கே
நினைவுப்படுத்திக் கொள்வோம்.
மாணவன் ஒருவன் பள்ளிக்கூடத்தின் ஆரம்ப வகுப்பில் இருக்கிறான்.
ஏதோ காரணத்தினால் ஆங்கிலப் பாடத்தில் மட்டும் குறைவாக
மதிப்பெண் எடுக்கிறhன். குடும்பத்திலும் பள்ளியிலும் ஒருவர் மாற்றி
ஒருவர், நீ இங்கிலீஷில் வீக் * உனக்கு இங்கிலீஷ் வராது.. . என்று
அரை டிராயர் கிளாஸிலிருந்து டிகிரி படிப்பு முடித்துக்
கல்லூரியைவிட்டு வெளியே வரும்வரை திரும்பத் திரும்பச்
சொல்கிறார்கள் *
நீ குரங்கு மாதிரி அசிங்கமாக இருக்கிறாய் என்று ரஃபன்சலைப்
பார்த்துச் சூனியக்காரி சொன்னதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்
இருக்கிறது.. .? இதுதான் NEGATIVE BELIEF (அவநம்பிக்கை).
மாணவனும் ரஃபன்சலைப் போலவே இதை உண்மை என்று நம்பி
வருகின்றான். அதனால் இங்கிலீஷ் பாடத்தில் அலர்ஜி மட்டுமில்லை.. .
ஆங்கில நியூஸ் பேப்பர் பக்கம்கூட அவன் போவதில்லை.
இங்கிலீஷில் யாரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசுவதும் இல்லை *
அந்த மொழியில்
பேசும் நிர்ப்பந்தம் வரும்போது கூட இங்கிலீஷ்
எல்லாம் எனக்கு வராது என்று தனக்குத் தானே திரும்பத் திரும்பச்
சொல்லிக் கொள்கிறhன். இதுதான் Repetative mind. ஆதாவது
செக்குமாட்டுச் சிந்தனை * ரஃபன்சல் கோட்டை கோபுரத்துக்குள் சிறை
பட்டதைப் போல், இந்த மாணவன் செக்குமாட்டுச் சிந்தனைக்குள்
மாட்டிக் கொள்கிறhன். அவன் அந்த உணர்ச்சியால் ஆங்கிலும்
கற்கும் முயற்சியில் இறங்கவே இல்லை.
இந்த மாணவனின் தன்னம்பிக்கையை வளர்க்க இளவரசன் ஒருவன்
வரவேண்டும். இந்த இளவரசனைத்தான் நான் creativity என்கிறேன்.
இந்த இளவரசனால்தான் அவநம்பிக்கை என்ற சூனியக்காரியை
வீழ்த்த முடியும் * இந்த கிரியேட்டிவிட்டி என்ற இளவரசனால்தான்
நம்முடைய ஆற்றல் என்ற இளவரசியை ரெப்பிடேடீவ் மைண்ட்
என்ற சிறையிலிருந்து விடுவிக்கவும் முடியும் *
இங்கிலீஷ் பேசக் கூச்சப்படுவது என்பது ஒரே ஒரு உதாரணம்தான் *
வாழ்க்கையில் இதுமாதிரி பல உதாரணங்கள் நிகழ்கின்றன. பாரபட்சம்
காட்டும் மேலதிகாரி, வாங்கிய கடனைக் கொடுக்காமல் ஆட்டம்
காட்டும் கடன் காரன், மரியாதை கொடுக்கால் பேசும் மனைவி அல்லது
கணவன் போன்றவர்களை எதிர்கொள்ளும்போது சே.. . இந்த
ஜென்மத்தையெல்லாம் திருத்தவே முடியாது * திருத்தவே முடியாது.. .
என்ற Repetative mind-டோடு சிந்தித்தால் பிரச்னையிலிருந்து விடுதலை
கிடைக்காது * இவர்களை எப்படி அணுக வேண்டும் என்பதை
ஆரம்பத்திலிருந்து தெளிவாக சிந்திக்க, நமக்குக் கற்பனாசக்தி
(creativity) மிக மிக அவசியம் *
சரி, இந்தக் கற்பனாசக்தி நமக்கு வராமல் தடுக்கிற எதிரி எது.. ?
முக்கிய எதிரியே இந்த Repetative mindதான். எந்த ஒரு
விஷயத்தையும் புதிதான கோணத்திலிருந்து பார்க்கத் தடையாக
இருப்பதே இந்தச் செக்குமாட்டுச் சிந்தனைதான்
--
குடும்பம், மனைவி, மக்கள் என்பதன் அருமையெல்லாம் நம்மில் பலருக்குத் தெரியாது. எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் பல குடும்பங்களைச் சுக்குநூறாக்கிக் கொண்டிருக்கிறது. இதோ, இந்தக் கற்பனைக் கதையைப் பாருங்கள்.
அவர்கள் இருவரும் வயதானவர்கள். நாற்பது வருடத் தாம்பத்தியம் நடத்தியவர்கள். மிகப்பெரிய செல்வந்தனாக வேண்டும் என்ற கனவில் மிதந்தவர் அவர். ஆனால், அவரது ஆசை நிறைவேறாமலேயே மரணப்படுக்கையில் விழுந்தார்.
அந்தக் கடைசிக் காலத்திலா வது மனைவியின் அன்பை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், உறவினர் ஒருவர் சொன்னார்... ''உன் மனைவி எத்தனை அன்பானவள் தெரியுமா? கல்யாணம் ஆன புதிதில், நீ உன் அலுவலகத்தில் பணத்தைக் கையாடல் செய்து வேலையை இழந்தாய். அப்போது உன் அப்பாவும் அம்மாவும்கூட 'நீ எனக்குப் பிள்ளையே கிடையாது' என்று
சொல்லி, உன்னைப் பிரிந்து போனார்கள். ஆனால், உன் மனைவி மட்டும் உன்னோடுதான் இருந்தாள்.
பிறகு பிஸினஸ் செய்யப்போகிறேன் என்று பல லட்ச ரூபாயை வங்கிக் கடனாக வாங்கி ஒரு ஷோரூம் ஆரம்பித்தாய். அதில் பெரிய நஷ்டம் வந்து கடன்காரனாகி கடைசியில் அந்த பிஸினஸ#ம் கைவிட்டுப் போனது. உன்னோடு நெருக்கமாயிருந்த நண்பர்கள்கூட அந்த நேரத்தில் விலகிப் போனார்கள். அப்போதும் உன் மனைவி உன்னோடு இருந்தாள்.
பிறகு கெட்ட சகவாசங்கள், தீய பழக்கங்கள் வந்து சேர, ஒழுக்கம் கெட்ட வாழ்க்கை வாழ்ந்து வியாதியஸ்தனானாய். அப்போது நீ பெற்ற பிள்ளைகளே, உன்னை உதறிவிட்டுப் போனார்கள். ஆனால், அப்போதும் உன்னோடு இருந்தது உன் மனைவி மட்டும்தான். இதிலிருந்து உனக்கு என்ன புரிகிறது?'' என்று அந்தக் கணவனை நோக்கிக் கேட்டார் உறவினர்.
அதற்குக் கணவர் சொன்னார்: ''எனக்குக் கெட்டது நடந்த ஒவ்வொரு நேரத்திலும் இவள் என் பக்கத்தில் இருந்திருக்கிறாள். இவள் துரதிர்ஷ்டத்தால்தான் நான் இப்படிக் கஷ்டப் பட்டிருக்கிறேன்...''
இன்னொரு வகை தம்பதிகளும் இருக்கிறார்கள்.
கார் வாங்க வேண்டும். அபார்ட்மெண்ட் வாங்க வேண்டும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெற வேண்டும் என்று சதா அலைந்து கொண்டே இருப்பார்கள். இந்த அலைச்சல் காரணமாக, கணவன் - மனைவி இரண்டு பேருக்கும் வீட்டில் பேசிக்கொள்ளக்கூட நேரம் கிடைக்காது.
அப்படியே பேசினாலும் 'உன் பி.எஃப்-ல் எத்தனை பணம் இருக்கிறது? உனக்கு பாங்க்கில் எவ்வளவு கடன் கொடுப்பார்கள்?' என்று ஏதோ கம்பெனி ஆடிட்டர்கள் மாதிரிதான் பேசிகொள்வார்கள்.
'அன்பு, அந்நியோன்யம், குழந்தைகள் - இதற்கெல்லாம் எப்போது நேரம் ஒதுக்கப்போகிறீர்கள்?' என்று கேட்டால்... 'கார், அபார்ட்மெண்ட் பதவி உயர்வு எல்லாம் வாங்கிய பிறகு' என்று சொல்வார்கள்.
வெற்றியையும் செல்வத்தையும் வாழ்க்கையில் தேட வேண்டியதுதான். தப்பு என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால், எதை விலையாகக் கொடுத்து இதையெல்லாம் வாங்கப் போகிறோம் என்பதை நாம் கணக்கிட வேண்டியது அவசியம் இல்லையா?
மும்பைவாசிகள் பற்றி ஒரு கிண்டல் உண்டு. அதாவது, பணிக் காலத்தில் தங்களின் ஆரோக்கியம் எல்லாவற்றையும் விலையாகக் கொடுத்து, ஐம்பது வயது வரை அவர்கள் பணம் சம்பாதிப்பார்கள். அதன்பிறகு இழந்த ஆரோக்கியத்தைத் திரும்பப் பெறுவதற்காக, சம்பாதித்த பணத்தையெல்லாம் செலவழிப்பார்களாம்
அது ஒரு கிராமம்... அங்கே ஒரு வீடு. அந்த வீட்டுக்கு ஒரு நாள் மூன்று பெரியவர்கள் வந்தார்கள். நீண்ட நேரம் பயணம் செய்த களைப்பு அவர்களிடம் தெரிந்தது.
இவர்களைப் பார்த்த அந்த வீட்டுப் பெண்மணி, 'உள்ளே வாருங்கள்... என் கணவர் வந்துவிடுவார் உணவருந்தலாம்...' என்று அழைத்தாள்.
'ஆண்மக்கள் இல்லாத வீட்டில் நாங்கள் உணவருந்த மாட்டோம். அதனால் உன் கணவன் வீடு திரும்பும் வரை, இங்கேயே காத்திருக்கிறோம்...' என்று அவர்கள் திண்ணையிலேயே இளைப்பாற ஆரம்பித்தார்கள்.
வயல்வேலைக்குப் போயிருந்த கணவன் மாலையில் வீடு திரும்பினான். உடனே அவனது மனைவி, திண்ணையில் உறங்கிக்கொண்டிருந்த பெரியவர்களிடம் சென்று, 'என் கணவர் வந்துவிட்டார். இப்போது எங்கள் வீட்டுக்குள் வர உங்களுக்கு
தடையில்லையே?' என்று கேட்க... அவர்கள், 'தடையில்லை... ஆனால், ஒரு நிபந்தனை. எங்களில் ஒருவர் மட்டுமே உங்கள் வீட்டுக்கு வரமுடியும்' என்றனர்.
அந்தப் பெண்மணி காரணம் புரியாமல் விழிக்க... அவர்களில் மிகவும் வயது முதிர்ந்தவராக இருந்த பெரியவர், 'என் பெயர் அன்பு. இவன் பெயர் வெற்றி. அவன் பெயர் செல்வம். எங்களில் ஒருவரைத்தான் வீட்டுக்குள் அழைக்க முடியும். அதனால் யாரை அழைப்பது என்று நீயே தேர்ந்தெடுத்துக்கொள்...' என்று சொல்ல, 'வந்திருப்பவர்கள் வழிப் போக்கர்கள் அல்ல... செல்வம், வெற்றி, அன்பு என்ற மூன்றுக்கும் அதிபதியாக இருக்கும் தேவர்கள்!' என்பது அந்தப் பெண்மணிக்குப் புரிந்தது.
பூரிப்போடு வீட்டுக்குள் ஓடிய பெண்மணி, விஷயத்தைக் கணவனிடம் சொன்னாள். கணவனுக்கு பரவசமும் பதற்றமும் தொற்றிக்கொண்டது. 'வாழ்க்கையில் வெற்றிதான் முக்கியம். அதனால் அவரை நம் வீட்டுக்கு அழைக்கலாம்' என்று யோசனை சொன்னான்.
அதற்கு இவள், 'வெற்றி வந்தால் மட்டும் என்ன பயன்? செல்வம்தானே முக்கியம். அதனால் செல்வத்தை அழைத்து வரலாம்' என்று பரபரத்தாள்.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்ட அவர்களின் மருமகள் சொன்னாள்... 'வெற்றியையும் செல்வத்தையும்விட அன்பு இருந்தால்தான் கணவன், மனைவி, குழந்தை, மாமா, அத்தை என்று நாமெல்லாரும் சந்தோஷமாக ஒற்றுமையாக இருக்க முடியும். அதனால், அன்புதான் எல்லா வற்றுக்கும் அடிப்படை...' என்று சொல்ல, அந்த யோசனையை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.
உடனே அந்த வீட்டின் தலைவி வீட்டுக்கு வெளியே சென்று, 'உங்களில் அன்பு யாரோ, அவர் உள்ளே வரலாம்...' என்று சொல்ல, அன்பு என்ற பெரியவர் வீட்டின் உள்ளே சென்றார். அன்பைத் தொடர்ந்து வெற்றி, செல்வம் என்ற மற்ற இரண்டு பெரியவர்களும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். இதைப் பார்த்த அந்தப் பெண்மணிக்கு ஆச்சரியம்!
பிறகு அவர்கள் சொன்னார்கள் - 'நீங்கள் வெற்றியையோ, செல்வத்தையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வீட்டின் வெளியி லேயே தங்கிவிட்டிருப்போம். ஆனால், அன்பை நீங்கள் அழைத்ததால்தான், நாங்கள் இருவரும் உங்கள் வீட்டுக்குள் வந்தோம். காரணம், அன்பு எங்கு சென்றாலும் அதைப் பின்பற்றி, அதன் பின்னாலேயே செல்ல வேண்டும் என்பதுதான் ஆண்டவன் எங்களுக்கு இட்ட கட்டளை!'
மாணவர் ஒருவர் என்னை வந்து சந்தித்தார்.
''சுவாமி... சின்ன வயது முதலே டாக்டராக வேண்டும் என்பது என் கனவு. ஆனால், ப்ளஸ்டூவில் நான் எடுத்திருக்கும் மார்க்கும் என்ட்ரன்ஸ் டெஸ்ட்டில் கிடைத்த மார்க்கும் என் டாக்டர் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுவிடும் போலிருக்கிறது. இத்தனை வருடம் நான் ராப்பகலாக உழைத்த அத்தனை உழைப்பும் ஒரே நாளில் வீணாகிவிடும் போல இருக்கிறது. பேசாமல் தற்கொலை செய்து கொள்ளலாமா என்றுகூடத் தோன்றுகிறது!'' என்று சொல்லி அடக்க முடியாமல் விம்மி அழுதார் அந்த மாணவர்.
அப்போது அவருக்குக் கூறிய இந்தக் கதையை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
அது ஒரு அடர்ந்த காடு. அந்தக் காட்டில் அடுத்தடுத்து மூன்று மரங்கள் வளர்ந்திருந்தன. அவை ஒரு நாள் தங்களின் அபிலாஷைகளை மனம்விட்டுப் பகிர்ந்து கொண்டன.
முதல் மரம் சொல்லியது... ''தங்கம், வைரம் போன்ற செல்வங்களைப் பாதுகாக்கும் நகைப்பெட்டியாக நான் ஆகவேண்டும்!''
''அதிகாரம் நிறைந்த மாமன்னனைச் சுமந்து செல்லும் கப்பலாக ஆக வேண்டும் என்பது தான் என் லட்சியம்'' என்றது இரண்டாவது மரம்.
''நான் விண்ணிலே இருக்கும் ஆண்டவனைத் தொடும் அளவுக்கு உயரமாக வளர வேண்டும். ஆண்டவன் என் மீது இளைப்பாற வேண்டும். அதுதான் என் லட்சியம்!'' என்றது மூன்றாவது மரம்.
இப்படி மரங்கள் பேசிக் கொண்டிருந்தபோது அந்தக் காட்டுக்கு மூன்று விறகுவெட்டிகள் வந்தார்கள். பணப்பெட்டியாக வேண்டும் என்று நினைத்த மரத்தைக் காட்டி, ''இது மிகவும் உறுதியாக இருக்கிறது. இதை வெட்டி நகைப்பெட்டி செய்தால் நல்ல விலைக்குப் போகும்'' என்று அந்த மரத்தை வெட்டி எடுத்துக் கொண்டு போனான் முதல் விறகு வெட்டி. தன் லட்சியம் நிறைவேறப்போவதை நினைத்து அந்த மரம் சந்தோஷித்தது.
கப்பலாக ஆசைப்பட்ட மரத்தைப் பார்த்த அடுத்த விறகு வெட்டி... ''இந்த மரம் வளைவுகள் ஏதும் இல்லாமல் நேராக இருக்கிறது. அதனால் இதை கப்பல் கட்டும் தச்சர்களிடம் நான் விற்றுவிடப் போகிறேன்'' என்று அந்த மரத்தை வெட்டி எடுத்துக்கொண்டு போனான். கப்பலாகப்போகும் கனவில் அந்த மரம் மிதந்தது.
மூன்றாவது விறகு வெட்டி, விண்ணைத் தொடும் அளவுக்கு உயரமாக வளரப் போவதாக ஆசைப்பட்ட மரத்தை வெட்டியதுமே அதன் ஆசை நிராசையாகி விட, அது சோகத்தில் ஆழ்ந்தது.
சில நாட்கள் ஆயின. பணப்பெட்டி செய்யப் போகிறேன் என்று மரத்தை வெட்டிக் கொண்டு போனவன் மனதை மாற்றிக் கொண்டான். பணப்பெட்டிக்குப் பதிலாக அந்த மரத்தை கொண்டு அவன் மாடுகளுக்குத் தீவனம் வைக்கும் பெட்டியைச் செய்தான். சாணத்துக்கும் கோமியத்துக்கும் மத்தியில் வந்து சேர்ந்த அந்த மரம் தன் கனவு சிதைந்து போனதை எண்ணிக் கலங்கியது.
அடுத்து கப்பல் செய்யப்போகிறேன் என்று புறப்பட்ட விறகுவெட்டி அந்த மரத்தை சாதாரணப் படகு செய்கிறவனிடம் தர, அது சின்னப் படகாக உருவெடுத்தது. மன்னனைச் சுமக்கும் ஆசை மண்ணாகிப் போனது குறித்து அந்த மரம் மனம் வெதும்பியது.
இறைவனின் திருவடிகளைத் தொட நினைத்த மரம் எந்த உபயோகமுமின்றி ஏதோ ஒரு இருட்டறையில் துயரத்துடன் வீழ்ந்து கிடந்தது.
ஒரு நாள் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி பிரசவத்துக்காகத் தன் கணவனுடன் வைத்தியர் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். வழியிலேயே அவளுக்குப் பிரசவ வலி ஏற்பட, அங்கே இருந்த மாட்டுக் கொட்டகையில் அவர்கள் தஞ்சம் புகுந்தார்கள். அங்கேயே அவள் ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுத்தாள். கணவன், அவசரத்துக்கு அங்கே இருந்த தீவனப் பெட்டியில் வைக்கோலைப் பரப்பி அதில் குழந்தையைப் படுக்க வைத்தான். விலையுயர்ந்த செல்வங்களைப் பாதுகாக்கும் நகைப் பெட்டியாக உருவெடுக்க நினைத்த மரத்துக்கு அதைவிட மதிப்பு வாய்ந்த ஒரு உயிரைப் பாதுகாக்கும் வேலை கிடைத்ததும் தான் கேட்டதை விடவே ஆண்டவன் அதிகமாகக் கொடுத்திருக்கிறான் என்று உச்சிகுளிர்ந்து போனது.
படகாகிப் போன மரம் ஒரு நாள் கடலில் பயணம் செய்யும் போது புயல் உண்டாகியது. சுழன்றடிக்கும் சூறாவளிக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் அதில் பயணித்துக் கொண்டிருந்த ஒவ்வொருவரும் பதறிக்கொண்டிருக்க, வயதான துறவி ஒருவர் அவர்களை அமைதிப்படுத்திவிட்டு, தன் கையை உயர்த்தி 'நிறுத்து' கட்டளையிட்டார். என்ன அதிசயம்! புயல் சட்டென்று நின்றது. பரவசமடைந்த பயணிகள், அந்தத் துறவியின் காலில் விழுந்து வணங்க.. மாமன்னனைவிட ஒரு பெரிய மகானைச் சுமந்த சந்தோஷத்தில் அந்த மரம் மகிழ்ச்சி அடைந்தது.
இருட்டறையில் முடங்கிக் கிடந்த மூன்றாவது மரம் ஒரு நாள் வெளியே கொண்டுவரப்பட்டது. கண்களில் அருள் பொங்கும் தோற்றமுடைய ஒருவர் அதைத் தூக்கிக் கொண்டு வீதிகளில் தள்ளாடித் தள்ளாடி நடந்து போனார். அவரைச் சிலர் சவுக்கால் அடித்து அடித்து ஒரு மலையின் உச்சிக்கு நடத்திச் சென்றார்கள். அங்கே, அந்த மரத்திலேயே அவரை ஆணிவைத்து அறைந்தார்கள்.
அவர்தான் தேவகுமாரனான இயேசு கிறிஸ்து! இந்த உண்மை தெரிய வந்ததும், தன் ஆசையை இறைவன் பூர்த்திசெய்து விட்டதை அறிந்து அந்த மரம் மகிழ்ச்சியில் விம்மியது.
ஆக, மூன்று மரங்களும் தாங்கள் என்னவாக வேண்டும் என்று ஆசைப்பட்டனவோ அவ்விதமே ஆயின. ஆனால், அவை விரும்பிய வழியில் அல்ல; கடவுள் தேர்ந்தெடுத்த வழியில்.
மரங்களுக்குப் பொருந்தும் இந்த உண்மை மனிதர்களுக்கும் பொருந்தும். கடவுள் நம் நல்ல நோக்கங்களை நிச்சயம் பூர்த்தி செய்வார்; ஆசைகளை அல்ல!

ஆசிரியர் என்பவரும் சூரியன் மாதிரிதான்

சென்ற வாரம் சென்னை வந்திருந்தேன். கல்லூரி மாணவர்கள் பலரைச் சந்தித்தேன். உற்சாகமாக என்னிடம் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் என்னிடம் பேசினார். ''சுவாமி, நான் நான்காம் ஆண்டு பொறியியல் படிக்கிறேன். என்னுடன் பயிலும் அத்தனை பேருக்கும் கேம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலை கிடைத்துவிட்டது. இத்தனைக்கும் என் வகுப்பில் படிக்கும் பலரைவிட நான் அதிக மதிப்பெண் எடுத்திருக்கிறேன். ஆனாலும் வேலை கிடைக்கவில்லை'' என்றார்.
நம் நாட்டின் ஜனாதிபதியாகவிருக்கும் விæஞான மேதை அப்துல் கலாம் பற்றி அந்த மாணவருக்குச் சொன் னேன்.
டாக்டர் அப்துல் கலாம் இயற்கையின் ரசிகர்.
பெங்களூரில் பூக்களுக்கும் மரங்களுக்கும் பஞ்சமே இல்லை என்பதால், அங்கே செட்டிலாக வேண்டும் என்ற எண்ணத்தில் புகழ்பெற்ற கல்விநிறு வனமொன்றில் சேர்ந்து பணியாற்ற ஆவலோடு இருந்தார் அப்துல் கலாம். ஆனால், அந்த
நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் சிலர், அப்துல் கலாம் முறையாக பிஹெச்.டி. படிக்காதவர் என்று காரணம் சொல்லி அவருக்குத் தங்கள் நிறுவனத்தின் கதவுகளை மூடிவிட்டனர்.
இந்தச் சம்பவம் நடந்தபோது அப்துல் கலாமின் வயது 70. அதுவும் அக்னி ஏவுகணை வெற்றிக்குப் பிறகு! பொக்ரான் வெற்றிக்குப் பிறகு! பிரதமரின் பிரதான அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றியதற்குப் பிறகு!
இந்நிலையில் இந்தச் சம்பவம் அப்துல் கலாமைப் பாதித்து இருக்குமா? நிச்சயம் பாதித்திருக்காது. தன்னுடைய ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்குக் கொடுத்துவைக்கவில்லை என்றுதான் நினைத்திருப்பார். எடுத்துக் கொண்ட குறிக்கோளுக் காகவும் லட்சியத்துக்காகவும் ஒருமுகச் சிந்தனையோடு செயல்பட்டால் இது மாதிரியான சின்ன சின்னத் தோல்விகள் நம்மை ஒருபோதும் பாதிக்காது.
என்றாலும் அந்த மாணவர் விடவில்லை. 'என்னைவிடக் குறைவாக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு எல்லாம் உடனடியாக வேலை கிடைத்திருக்கிறது. ஆனால், எனக்குக் கிடைக்கவில்லை என்று நினைக்கும்போது என்னால் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லையே சுவாமி!' என்றார் மீண்டும் ஆதங்கத்தோடு!
நான் சொன்னேன்: ''ஒருவரை வேலைக்கு எடுக்கும்போது மதிப்பெண் மட்டுமே அளவுகோல் என்று யார் சொன்னது? இரண்டு வருடங்களுக்கு முன்பு கம்ப்யூட்டர் கோடிங் எழுதத் தெரிந்திருந்தால் போதும், அமெரிக்காவில் உடனடியாக வேலை கிடைக்கும். ஆனால், இப்போதோ கோடிங் மட்டும் எழுதத் தெரிந்தால் போதாது... டீமில் இருக்கும் மற்ற ஊழியர்களிடம் ஒருங்கிணைந்து வேலைசெய்யத் தெரிந்திருக்க வேண்டும். கஸ்டமர்களின் தேவை என்ன என்பதை அவர்களுடன் நட்போடு பழகிப் புரிந்துகொள்ளத் தெரிந்திருக்க வேண்டும்.. தான் உருவாக்கிய ப்ரோகிராமை விற்பனை செய்யும் சாமர்த்தியம் வேண்டும்.''
அடுத்ததாக இன்னொரு மாணவர் கேட்டார்: ''வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுக்கும் போதும் சரி, புத்தகத்தைப் படிக்கும்போதும் சரி... எனக்குச் சற்று நிதானமாகத்தான் விஷயங்கள் தெளிவாகின்றன. இந்தக் குறையைப் போக்கிக் கொள்வது எப்படி?''
''உங்கள் காதலியைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அதற்காக நீங்கள் எத்தனை மெனக்கெடுவீர்கள்? எத்தனை நாள் அந்தப் பெண்ணின் பின்னாலேயே போவீர்கள்? அப்போதெல்லாம் எவ்வளவு ஈடுபாட்டுடன் முழு மனதோடு முயற்சி எடுப்பீர்களோ, அதே உற்சா கத்துடனும் முனைப்புடனும் பாடத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் குறை மாயமாய் மறைந்து போகும்'' என்றேன்.
பிறகு ஒரு புராணக் கதையையும் சொன்னேன் -
துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமன். ஆனாலும் தன்னைப் பிரதான சீடனாக ஏற்காமல் அர்ஜுனனை ஏற்றுக்கொண்டாரே என்று தன் தந்தை மீது அஸ்வத்தாமனுக்கு வருத்தம். இதை நேரடியாகத் தந்தையிடம் சொல்லியும் விட்டான். அதற்கு துரோணாச்சாரியார் சொன்னார்...
'மகனே... நான் அர்ஜுனனுக்குச் சொல்லிக் கொடுத்ததைவிட உனக்குத்தான் அதிகமாகச் சொல்லிக் கொடுத்தேன். நாராயண அஸ்திரம் பற்றி அர்ஜுனனுக்கு நான் சொல்லித்தரவில்லை. அதை உனக்குக் கற்றுக் கொடுத்தேன். மகன் என்ற காரணத்தினால் மற்றவர்களைவிட உனக்குத்தான் அதிக முக்கியத்துவம் தந்தேன். இந்தச் சுயநலம் என் மனதில் புகுந்ததனால்தான் ரிஷி என்கிற அந்தஸ்தை என்னால் அடைய முடியாமல் போய்விட்டது. உண்மை இப்படியிருக்க, என்னைப் பார்த்து இப்படியரு கேள்வி கேட்கலாமா?'
'என்னைவிட அர்ஜுனனுக்கு நீங்கள் அதிகமாகச் சொல்லித் தரவில்லை என்பது உண்மையானால், அவன் என்னைவிடத் திறமைசாலியாக இருப்பது எப்படி?' என்று கேட்டான் அஸ்வத்தாமன்.
'நான் என்னவோ உங்கள் அனைவருக்குமே ஒரே மாதிரிதான் வித்தைகளைச் சொல்லிக்கொடுத்தேன். ஆனால், அவனோ உங்களைவிட அதிகமாகக் கற்றுக் கொண்டான். சொல்லப் போனால், உங்களுக்குப் பாடம் எடுப்பதை மறைந்திருந்து கவனித்த ஏகலைவன் உங்கள் அனைவரை விடவும், அர்ஜுனனை விடவும், ஏன்... என்னை விடவே அதிகமாக என்னிடமிருந்து கற்றுக்கொண்டான்' என்றார் துரோணாச்சாரியார்.
சூரிய உதயத்தை அபாரமாக வர்ணித்து எழுதியிருக்கிறார் சுப்பிரமணிய பாரதியார். வேறு சிலரோ 'எப்படி சுள்ளுனு அடிக்குது பாரு' என்று எரிச்சலோடு ஜன்னலை இழுத்துமூடிவிட்டு நிம்மதியாகப் படுத்துத் தூங்குகிறார்கள். அதனால்தான் அவர் மகாகவி பட்டம் பெற்றார். மற்றவர்கள் சோம்பேறிப் பட்டம் பெற்றார்கள். ஆசிரியர் என்பவரும் சூரியன் மாதிரிதான். பாரபட்சம் இல்லாதவர்.
நமது பால்ய காலத்தை!
'பொய் சொல்லக்கூடாது... திருடக்கூடாது... கஷ்டம் வந்தால் மூட்டை தூக்கிக்கூடப் பொழைக்கலாம், தப்பில்லை...' என்று எத்தனை எத்தனை நல்ல விஷயங்களை நமக்குக் கற்றுத் தந்தார்கள்.
ஆனால், இன்று..? அந்த அடிப்படை நல்லொழுக்கமே மெள்ள மெள்ள நீர்த்துப்போய்க் கொண்டிருக்கிறதோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது. பாமரர்களைவிடப் படித்தவர்களும் விஷயம் தெரிந்தவர்களுமே அதிகம் பொய் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
வீட்டில் போன் மணி அடித்தால், 'அப்பா வீட்டில் இல்லைனு சொல்லு' என்று குழந்தைகளுக்கு நாமே பொய் சொல்லக் கற்றுத் தருகிறோம்.
'ஏன் லேட்..?' என்று மனைவி கேட்டால், நம் கைவசம் ஏதோ ஒரு பொய் எப்போதும் தயாராக இருக்கிறது.
தெரிந்தே ஒரு பொய்யை மெய் என்று நம்புவதில் எவ்வளவு ஆபத்து இருக்கிறது, தெரியுமா..?
இதோ, இந்தக் கதையைப் படியுங்கள்.
ஒரு முறை முல்லா, பக்கத்து வீட்டுக்காரரிடம் பானை ஒன்றை இரவல் வாங்கினார். சில நாட்களுக்குப் பிறகு, பக்கத்து வீட்டுக்காரர் தயங்கித் தயங்கி, ''என் பானையைத் திருப்பிக் கொடுக்க முடியுமா..?'' என்று முல்லாவிடம் கேட்டார்.
''அடடா... உங்களிடம் இரவல் வாங்கிய பானையை உடனே திருப்பிக் கொடுக்காமல் மறந்துபோனதிலும் ஒரு லாபம் இருக்கிறது. ஆமாம்... உங்கள் பானை ஒரு குட்டி போட்டிருக்கிறது, பாருங்கள்!'' என்று சொல்லி, தான் இரவலாக வாங்கிய பானையுடன் சேர்த்து ஒரு குட்டிப் பானையையும் கொடுத்தார் முல்லா. பக்கத்து வீட்டுக்காரருக்குத் தாங்கமுடியாத சந்தோஷம்.
அடுத்த வாரமே முல்லா மறுபடியும் பக்கத்து வீட்டுக்காரரிடம் சென்று, ''போன தடவை கொடுத்ததைவிடப் பெரிய பானை ஒன்று இருந்தால், இரவலாகக் கொடுங்களேன்!'' என்று கேட்க... அவரும் 'ஒன்றுக்கு இரண்டாகப் பானை கிடைக்கும்' என்று சந்தோஷத்தோடு, வீட்டிலிருந்த மிகப்பெரிய பானையைத் தூக்கி முல்லாவிடம் கொடுத்தார்.
ஒரு வாரம் ஆயிற்று. பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் சென்று, தான் இரவலாகத் தந்த பானையைத் திரும்பக் கொடுக்க முடியுமா என்று கேட்டார்.
''அதை ஏன் கேக்கறீங்க..? நேத்து உங்க பானை செத்துப்போச்சு!'' என்றார் முல்லா.
பக்கத்து வீட்டுக்காரருக்கு மகா எரிச்சலாகி விட்டது! ''என்னை என்ன மடையன்னு நினைச்சியா..? பானை எப்படிச் செத்துப்போகும்..?'' என்றார் கோபமாக.
''பானை குட்டி போட முடியும்னு உன்னால் நம்பமுடியுது. பானை செத்துட்டதுனு சொன்னா நம்பமுடியலையா..?'' என்று திருப்பிக் கேட்டார் முல்லா. பக்கத்து வீட்டுக்காரர் வந்த சுவடே தெரியாமல் நடையைக் கட்டினார்.
இப்போது புரிகிறதா..? பொய் சொல்வது எவ்வளவு தப்போ, அவ்வளவு தப்பு - பொய் என்று தெரிந்தும் அதை நம்புவது!
சரி, நாம் பொய் சொல்லும்படியான அவசியம் ஏற்படாதிருக்க என்ன வழி..?
இல்லை, முடியாது போன்ற வார்த்தைகளைச் சொல்லக் கற்றுக் கொண்டால், ஏறக்குறைய ஐம்பது சதவிகிதப் பொய்களைச் சொல்லவேண்டிய அவசியமே ஏற்படாது.
ஆபீஸில் உடன் வேலை செய்பவர் மோட்டார்சைக்கிளை இரவலாகக் கேட்கிறார். 'ஸாரி... என் மோட்டார் சைக்கிளை நான் யாருக்கும் இரவல் கொடுப்பதில்லை' என்று நேரடியாகச் சொல்லிவிட்டால் எதிராளியின் முகம் வாடிப்போகுமே என்று பயந்து, 'இல்லைப்பா... பெட்ரோல் இல்லை, பிரேக் பிடிக்கலை...' என்று வாய்க்கு வந்த பொய்யைச் சொல்கிறோம். எதிராளியின் முகம் வாடிப் போய்விடக்கூடாது என்பதற்காக, நாம் பொய்யன் என்ற பட்டத்தைச் சுமப்பது எந்த விதத்தில் சரி..?
பொய் சொல்லக்கூடாது என்றால்... மனைவி, தாய், தந்தை, குடும்பத் தினர், நண்பர்கள் இவர்களிடம் எல்லாம் பொய் சொல்லலாமா..? அப்படியே பொய் சொன்னாலும், அது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்..?
ஒரு சின்னக் கதை... ஒரு கல்லூரியில் நான்கு நண்பர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். தாவரவியல் மாணவர்கள். ஒரே ஒரு பரீட்சையைத் தவிர, மற்ற எல்லா பரீட்சையும் எழுதிவிட்டார்கள். மிச்சமிருந்த ஒரு பரீட்சைக்கு இன்னும் ஒருவார காலம் இருந்தது.
மேலும், அது சுலபமான பேப்பர்தான் என்பதால், இடைப்பட்ட காலத்தில் பக்கத்தில் இருந்த ஒரு மலைவாசஸ்தலத்துக்கு பிக்னிக் போனார்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஜாலியாக இருந்தார்கள். அவர்கள் கிளம்பவேண்டிய தருணம் வந்தது.
அப்போது ஒரு மாணவன், ''க்ளைமேட் அருமையாக இருக்கிறது. இன்றிரவும் இங்கேயே தங்கிவிட்டு, நாளை காலை ஆறு மணிக்கு காரில் கிளம்பினால் போதும்... பரீட்சை நேரத்துக்குக் கல்லூரிக்குப் போய்விடலாம்...'' என்றான்.
'அதுவும் சரிதான்' என்று மாணவர்கள் அன்று முழுவதும் அங்கேயே கோலாகலமாகக் கழித்துவிட்டு, இரவு தாமதமாகத் தூங்கினார்கள். நெடுநேரம் கழித்தே கண்விழித்தார்கள். 'சரி, புரொபசரிடம் ஏதாவது பொய் சொல்லி, மாற்றுப் பரீட்சைக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம்' என்று நம்பிக்கையோடு புறப்பட்டார்கள்.
புரொபசர் முன் நல்ல பிள்ளைகள் மாதிரி வந்து நின்றவர்கள், ''சார்... நாங்கள் அரிதான சில தாவரங்களைச் சேகரிப்பதற்காக ஒரு மலைவாசஸ்தலத்துக்குச் சென்றிருந்தோம். அங்கிருந்து நேராகப் பரீட்சை எழுதக் கல்லூரிக்கு வந்துவிடலாம் என்ற திட்டத்தில், விடியற்காலை காரில் கிளம்பினோம். வழியில் கார் பஞ்ச்சராகிவிட்டது. அதனால் பரீட்சை எழுத முடியவில்லை. நீங்கள்தான் பெரிய மனசு பண்ணி, எங்களுக்கு மாற்றுப் பரீட்சை வைக்க வேண்டும்...'' என்று பொய்யை மெய்மாதிரி உருகிச் சொன்னார்கள்.
பேராசிரியரும் ஒப்புக்கொண்டார். அந்த நான்கு மாணவர்களையும் நான்கு வெவ்வேறு அறைகளில் அமர வைத்து பரீட்சை எழுதச் சொன்னார். மாணவர்களுக்கு செம குஷி. உற்சாகத்துடன் பரீட்சை எழுத உட்கார்ந்தார்கள்.
முதல் கேள்வி மிகவும் சுலபமாக இருந்தது. மாணவர்கள் அதற்கு விடை எழுதிவிட்டு, அந்தக் கேள்விக்கான மார்க் என்ன என்று பார்த்தார்கள். ஐந்து. சரி என்று அடுத்த பக்கத்தைத் திருப்பினார்கள். 95 மார்க் என்ற குறிப்புடன் காணப்பட்ட அடுத்த கேள்வி, அவர்களின் முகத்தை அறைந்தது.
அந்தக் கேள்வி - 'உங்கள் காரில் பæசரானது எந்த டயர்..?'
பæசர் என்று பொய் சொன்னார்களே தவிர... இப்படி ஒரு கேள்வி வரும், அதற்கு இன்ன டயர்தான் பæசர் ஆனது என்று நாலு பேரும் ஒன்றுபோல் பதில் சொல்ல வேண்டும் என்று பேசி வைத்துக் கொள்ளவில்லையே!
பொய் என்பது தீக்குச்சியைப் போல. அது அந்த கணத்துக்கு மட்டுமே பலன் கொடுக்கும். உண்மை என்பது சூரியனைப் போல... அது வாழ்நாள் முழுதும் மட்டுமல்ல, வாழ்ந்து முடிந்த பிறகும்கூடப் பலன் கொடுக்கும்.
===============

அனுபவம் இரண்டே வகைதான்

அனுபவம் இரண்டே வகைதான்*

அமெரிக்கா - வியட்நாம் போர் நடந்த சமயம்.

யுத்தம், வியட்நாம் நாட்டை நார்நாராகக் கிழித்துப் போட்டிருந்தது. வீட்டை இழந்த மக்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள். கணவனை இழந்த மனைவி என்று நாடு முழுவதும் கண்ணீராலும் ரத்தத்தாலும் நனைந்திருந்தது. போரின் விளைவுகளைப் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிதற்காக அமெரிக்க அரசு, இரண்டு தளபதிகளை அப்போது வியட்நாமுக்கு அனுப்பியது.

கை. கால் சிதைந்து துடிக்கும் சிப்பாய்கள், குழந்தையின் பிணத்துக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கதறும் தாய்மார்கள் என்று காட்சிகளைப் பார்த்த ஒரு தளபதியால் இந்தச் சோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை* தற்கொலை செய்து கொண்டு. அவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்*

இந்தத் தளபதி பார்த்த, அதே காட்சிகளை அடுத்த தளபதியும் பார்த்தார்.. பார்த்த பிறகு தனக்கிருந்த சின்னச் சின்னக் கவலைகளெல்லாம் இதற்கு முன் ஒன்றுமே இல்லை என்றாகி விட்டது அவருக்கு. ஊர் திரும்பியதும் அவர், 'கொடுத்த கடன் திரும்பி வரவில்லையே.. சொந்தமாக கார் வாங்க முடியவில்லையே..' என்பது போன்ற தினப்படிக் கவலைகளில் இருக்கும் மனிதர்களிடம்,. வியட்நாம் மக்களின் அவதிகளை எடுத்துச் சொன்னார். மக்கள் மனமுருகிக் கேட்டார்கள். அதன் பிறகு வியட்நாம் அனுபவம் பற்றிப் பேசச் சொல்லி இந்தத் தளபதிக்கு நிறைய அழைப்பு* இதை வைத்தே அவர் பொpய பணக்காரராகி விட்டார்*

ஒரு தளபதி தற்கொலை செய்து கொள்கிறhர். அடுத்தவரோ, தனக்கிருந்த பிரச்னைகளையே மறந்து, மற்றவர்களின் பிரச்னைகளையும் மறக்கடிக்கிறhர். ஆனால். அடிப்படையில் இருவரும் பார்த்த காட்சிகள் ஒன்றுதான்.

இதே மாதிரியே இன்னொரு உதாரணத்தைச் சொல்லிவிட்டு விஷயத்துக்கு வருகிறேன்-

அது ஷூ தயாரிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம். தனது கம்பெனியின் ஷூக்களுக்கு குறிப்பிட்ட ஓர் ஆப்பிரிக்க நாட்டில் எவ்வளவு 'டிமாண்ட்' இருக்கிறது என்று தெரிந்து கொள்ள கம்பெனி முதலாளி அந்த நாட்டுக்கு ஒரு மேனேஜரை அனுப்பினார். போன வேகத்திலேயே தனது நாட்டுக்குப் பறந்து வந்த மானேஜர், 'அந்த நாட்டில் நாம் ஷூக்களையே விற்க முடியாது..' என்று ரிப்போர்ட் கொடுத்தார்* 'ஏன்..?' என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்.. 'அந்த நாட்டில் யாருமே ஷூ அணிவதில்லை*'

முதலாளி, 'முடியாது' என்ற வார்த்தையை அத்தனை சுலபமாக ஏற்றுக் கொள்ளும் ரகம் கிடையாது.அதே ஆப்பிரிக்க நாட்டுக்கு இன்னொரு மானேஜரை அனுப்பினார். அந்த நாட்டுக்குப் போய் ஸ்டடி செய்த இரண்டாவது மானேஜர் சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டு முதலாளியின் அறைக்குள் ஓடி வந்து சொன்னார்- 'நமது கம்பெனியின் ஷூக்களுக்கு அங்கே மிகப் பெரிய மார்க்கெட் இருக்கிறது*'

'எப்படி..?' என்று அவரிடம் முதலாளி கேட்டார் அதற்கு இரண்டாவது மானேஜர் சொன்ன பதில்.. 'அந்த நாட்டில் யாருமே ஷூ அணிவதில்லை*'

இதிலிருந்து நாம் படிக்கவேண்டிய பாடம் இதுதான்* ஒவ்வொரு மனிதனும் அலுவலகம்,. வியாபாரம், வீடு என்று வகைவகையான சந்தர்ப்பங்களில் விதவிதமான அனுபவங்களுக்கு ஆட்படுகிறhன்* ஆனால். என்னைப் பொறுத்தவரை, எல்லா அனுபவங்களையும் இரண்டே வகையாகத்தான் பிரிக்க முடியும்.

ஆட்படும் அனுபவம் எதுவாக இருந்தாலும், அதிலிருந்து ஏதாவது ஒரு பாடம் படிக்க வேண்டும் அது - சிறப்பான அனுபவம்* எந்த அனுபவத்திலிருந்து அவன் பாடம் எதுவுமே கற்றுக் கொள்ளவில்லையோ, அது - மோசமான அனுபவம்*

மின்சார விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், தனது முதல் முயற்சியிலேயே வெற்றியைத் தொட்டு விடவில்லை. ஏற்க்குறைய ஆயிரம் சோதனைகளுக்குப் பிறகுதான் அவர் 'பல்ப்' கண்டுபிடித்தார். 'நீங்கள் ஆயிரம் சோதனை செய்தீர்கள்.. அதில் 999 சோதனைகள் தோல்வியடைந்தன. ஒன்றே ஒன்றுதான் வெற்றி பெற்றது* இல்லையா..?' என்று அவரிடம் யாரோ ஒருமுறை கேட்டார்கள,; அதற்கு எடிசன் சொன்னார் -

'முதல் 999 சோதனைகளிலும் நான் எதுவுமே கண்டுபிடிக்கவில்லை என்று யார் சொன்னது..? ஒரு பல்ப்பை உருவாக்கத் தவறாக முயற்சி செய்வது எப்படி..? என்று இந்த 999 சோதனைகளிலிருந்து நான் கற்றுக் கொண்டேனே*'


இன்னும் மின்னும்..........

யார் குற்றவாளி ?

யார் குற்றவாளி ?

பார்க்கும் சக்தி என்பது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆனால் நாம் நமது கண்களின் முழு அருமையையும் உணருவது கிடையாது. கண்களைப் பார்ப்பதற்கு பயன்படுத்துவதைவிட தூங்குவதற்கு அதிகம் பயன்படுத்துகிறவர்கள் உண்டு. கண்கள் திறந்திருக்கும்போதே எதிரில் தெரியும் காட்சியைச் சரியாகப் பார்க்காமல் கனவுலகில் சஞ்சரிப்பபவர்களுக்கும் உண்டு *

சரி.. தூங்கவும் இல்லை * கனவும் காணவில்லை அப்போதாவது எதிரில் தெரியும் காட்சி, நம் கண்களுக்கு உள்ளது உள்ளபடி தெரிகிறதா ? அதுவும் பலருக்குத் தெரிவதில்லை. கண்ணிலே ஏதாவது ஒரு கலர் கண்ணாடி மாட்டிக் கொண்டு பார்ப்பவர்கள் அதிகம். கலர் கண்ணாடி என்று நான் குறிப்பிடுவது அவரவரது Perception உறவினர்கள,; நண்பர்கள், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், அறிந்தவர்கள,; தெரிந்தவர்கள் விஷயங்களைப் பார்ககும்போது எந்தவித முழுமையான ஆதாரமும் இல்லாமல் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் அபிப்பிராயங்கள் தான் Perception

நிர்வாக இயல் வொர்க் - ஷாப்களில் ஒவ்வொருவரின் Perception எப்படி இருக்கிறது என்பதைப் புரியவைக்க சின்ன சின்ன புதிர்கள் போடுவார்கள். அதிலிருந்து உங்களுக்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்.

ரோமானிய முறைப்படி ஒன்பது என்பதை IX என்று எழுதுவோம் இல்லையா ? இதில் எங்கேயாவது ஒரே ஒரு கோடு மட்டும் சேர்த்து இந்த ஒன்பதை ஆறு என்று மாற்ற வேண்டும் கட்டுரையை மேலே படிப்பதற்கு முன்பு இரண்டு நிமிடம் செலவு செய்து ஒரே ஒரு கோடு போட்டு ஒன்பதை ஆறாக மாற்றுவது உங்களால் முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள்.

விடை இதுதான்

IX என்பது ரோமானிய முறைப்படி ஒன்பது சரி. இதையே ஆங்கில எழுத்துக்களாக நினைத்துக் கொண்டு இரண்டாம் முறை பாருங்கள் I மற்றும் Xஎன்ற இரு எழுத்துக்கள் தெரிகிறதா ? அதன் முன்னால் s என்ற ஆங்கில எழுத்தைச் சேருங்கள்.

ஆகா.. ஒன்பது ஆறாகிவிட்டது *

ஒரு கோடு மட்டும் சேர்க்கலாம் என்று சொன்னவுடன் நம்மில் பலருக்கு நேர்க்கோடுதான் நினைவுக்கு வரும் ஏன்.. Sஎன்பது வளைவான ஒரே கோடுதான். ஆனால் அது சிலருக்கு அப்படி நினைவுக்கு வருவதில்லை. சிலருக்கு இது சட்டென்று தோன்றிவிடும். விடுகதைக்கு விடை கண்டுபிடிக்க Perception எப்படி நமக்குத் தடையாக இருக்கிறதோ அதே மாதிரிதான் கண்ணுக்கு எதிரே தெரியும் காட்சிகளின் உண்மையான பின் அர்த்தங்களையும் இந்த நமக்கு நிறம் மாற்றிக் காட்டிவிடும்.

இந்தக் கதையைப் பாருங்கள்..

அது கொடிய விலங்குகள் நிறைந்த பயங்கர காடு * அங்கே ஒரு விறகு வெட்டி * அவனுக்கு ஒரு மனைவி * அவள் ரொம்பவும் அழகானவளும் ஆனால், விறகு வெட்டும் நேரம் போக மீதி நேரம் எல்லாம் குடித்து விட்டு தன் மனைவியை அடிப்பதுதான் அவனுக்கு வேலை * மனைவிக்கோ நாளுக்கு நாள் வாழ்க்கை கசந்துபோய்க் கொண்டிருந்தது. கணவன் வெட்டிப் போடும் விறகுகளை பரிசலில் ஏற்றிக் கொண்டு ஆற்றின் மறுகரைக்குப் போய் விற்று அதில் கிடைக்கும் காசிலிருந்து அரிசி, பருப்பு வாங்கி வந்து வீட்டில் சமையல் செய்ய வேண்டும். இதுதான் அவளது அன்றhட வேலை. காலப்போக்கில் எதிர்க்கரையில் இருந்த மளிகைக்கடைக்காரனுக்கும் விறகு வெட்டியின் மனைவிக்கும் மௌ;ள ஒரு நட்பு துளிர்த்து வளர ஆரம்பித்தது.

அன்று அமாவாசை. வழக்கத்தைவிட அதிகமாகக் குடித்து விட்டு வந்த விறகுவெட்டி, மனைவியைக் கொடூரமாக அடித்து உதைத்துக் கொடுமை படுத்த ஆரம்பித்தான். இவனிடம் பட்;ட அவஸ்தைகள் போதும் என்று மனைவி அந்த நட்ட நடு இரவில் வீட்டை விட்டு வெளியே வருகிறhள். அப்போது அவள் மனதில் கரைக்கு அந்தப் பக்கம் இருக்கும் மளிகைக் கடைக்காரனிடம் போய் விடலாம் என்று ஆற்றைக் கடக்க பரிசல் வேண்டும் விறகு வெட்டியின் மனைவி பரிசல்காரனைப் போய் எழுப்புகிறாள். பரிசல்காரனோ இவளுக்காகத் தன் தூக்கத்தைத் தியாகம் செய்யத் தயாராக இல்லை.

பரிசல் இல்லை என்றால் என்ன ? இரண்டு மைல் தூரம் ஆற்றோரமாக நடந்தால் ஆற்றின் குறுக்கே ஒரு மரப்பாலம் இருக்கிறது. அதன் வழியாகப் போய்விடலாம்ஞஎன்று இவள் நினைக்கிறhள். மரப்பாலத்தின் அருகே சிறுத்தை ஒன்று உலவுவதாகப் பலர் சொன்னது இவளின் நினைவுக்கு வருகிறது என்றhலும் அதைப் பற்றி கவலைப்படாமல் அவள் மரப்பாலம் நோக்கி நடக்கிறhள் *

அடுத்த நாள் காலை புலியால் தாக்கப்பட்டு சின்னாபின்னமாக மரப்பாலத்தின் அருகே அவள் உடல்.

இந்தக் கதையை உங்கள் வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் படித்துக் காட்டுங்கள். கடைசியில் விறகு வெட்டியின் மனைவி சாவுக்கு யார் காரணம் என்று தனித்தனியே கேட்டுப் பாருங்கள்.

நாசமாகப் போன அந்தக் குடிகார விறகு வெட்டிதான் * என்பர் ஒருவர். இன்னொருவர் ஒழுக்கம் கெட்ட விறகு வெட்டியின் மனைவி, தானே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டாள் * என்பார். மூன்றாமவர், உதவிக்கு வரமறுத்த இரக்கமற்ற பரிசல்காரன் என்பார் * விறகு வெட்டியின் மனைவியைத் தவறான நடத்தைக்கு ஈர்த்த மளிகைக்கடைக்காரன் தான் குற்றவாளி என்றும் யாராவது சொல்லக் கூடும் ஒரே கேள்விக்கு ஏன் இத்தனை விடைகள் ? ஏனென்றால் எல்லோருக்கும் ஒவ்வொரு Perception
நள்ளிரவில் ஓங்கி உயர்ந்து நிற்கிற ஓர் அரசமரத்தின் அடியிலிருந்து நிமிர்ந்து பார்க்கிறபோது உங்களுக்கு முதலில் அதன் கிளைகள் தொpயலாம். இலைகள் தொpயலாம் அதையெல்லாம் ஊடுருவிப் பார்க்கிற போதுதான் இலைகளுக்கு அப்பால் மறைந்திருக்கிற நிலாவின் பிரகாசம் தெரியும்.

அதுபோல் எந்த விஷயத்திலுமே எடுத்த எடுப்பில் உங்கள் Perceptionஒரு மனிதன் அல்லது அவனது செயல் மீது படிந்து. உண்மைக்கு மாறான தோற்றத்தையும் ஏற்படுத்தும்.

அந்த முதல் பார்வையை மனதுக்குள் வாங்காமல், நிதானத்தோடு விருப்பு வெறுப்புகள் இல்லாமல் தெளிவான மனநிலையில் அதே காட்சியை மீண்டும் அசைபோட்டுப் பார்த்தால்தான் பார்த்ததன் உண்மை உங்களுக்கு புரியும்.

இன்னும் மின்னும்.........

நன்றி சொல்வது எப்படி

குருவே * எதற்காக நன்றி சொன்னீர்?"

நன்றி சொல்வது எப்படி...?

இயந்திரத்தனமாக நாக்கிலிருந்து உச்சரிக்கப்படுவது அல்ல நன்றி ஒரு இதயத்திலிருந்து இன்னொரு இதயத்துக்கு உணர்த்தப்படுவது உணர்வுபூர்வமாக ஒருவர் தனது நன்றியை தெரிவிக்கும்போது. கும்பிடுவதற்காக தானாகவே கைகள் ஒன்று கூடும்.. உதடுகள் துடிக்கும்.. கண்களில் நீர்த்துளி பனிக்கும்...

இது ஜென் புத்திசத்தில் உள்ள ஒரு கதை * ஜப்பான் நாட்டில் உண்மையில் நடந்த கதை இது -

சிறிய ஓட்டல் ஒன்றுக்கு முதலாளி அவர். காலையில் எழுந்தால் இரவு படுக்கப் போகும் வரை. அவருக்கு ஓட்டல் வேலை சரியாக இருக்கும் என்றாலும், அவர் மனம் மட்டும் ஆன்மீகத்திலேயே மையம் கொண்டிருந்தது. ஒரே ஒரு ஜென் மதத் துறவியையாவது தரிசிக்க வேண்டும் என்பது இந்த ஓட்டல் முதலாளியின் தீராத ஆசை. ஆனால், துறவியைத் தேடிப் போகக் கூட அவரது வேலைப்பளு அனுமதிக்கவில்லை * ஓட்டல் முதலாளியின் விருப்பம் ஓட்டல் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, வழக்கமான வாடிக்கையாளர்களுக்குக் கூடத் தெரியும் *

ஜென் துறவிகள் மற்ற மதத் துறவிகள் போல காவி உடையோ அல்லது சாமியார்களுக்கென்று ஒரு பிரத்தியேகமான உடையோ வடிவமைத்து அணியமாட்டார்கள் * ஒரு சராசரி ஜப்பானியனைப் போன்றுதான் ஜென் மதத் துறவிகள் உடை அணிவார்கள். அதனால் ஜென் மதத் துறவி யார், சாதாரணக் குடிமகன் யார் என்று வேறுபடுத்திப் பார்ப்பது கடினம். *

ஒரு நாள் வழக்கம்போல், நமது ஓட்டல் முதலாளி மூச்சு விடக் கூட முடியாத அளவுக்கு ஒரே பிஸி என்றாலும், இடையில் கிடைக்கும் ஒரு சில நிமிடங்களை விரயமாக்காமல் ஓட்டலில் யார் சாப்பிடுகிறhர்கள்..? என்ன சாப்பிடுகிறhர்கள்..?" என்று கவனிப்பது இவரது வழக்கம். வழக்கம்போலவே நமது ஓட்டல் முதலாளி, அன்று உணவருந்திக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் பக்கம் பார்வையைத் திருப்பினார். அங்கே இரண்டு பேர் டீ அருந்திக் கொண்டிருந்தார்கள். ஓட்டல் முதலாளிக்கு உற்சாகம் பிடிபடவில்லை. "நான் இத்தனை வருடமாகக் காத்துக் கொண்டிருந்த ஜென் துறவிகள,; கடைசியில் என் ஓட்டலுக்கே வந்து விட்டார்கள்.." என்று உற்சாக கூச்சலோடு ஓடினார். டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த இருவரும் உண்மையிலேயே ஜென் துறவிகள் என்பதால், அவர்கள் ஓட்டல் முதலாளியின் ஆர்வத்தைப் பார்த்து, அவரைத் தங்களின் சீடராக ஏற்றுக் கொண்டார்கள் * தனது மகனிடம் ஓட்டலை ஒப்படைத்து விட்டு ஜென் துறவிகளின் பின்னால் நடக்கத் துவங்கிய மாஜி ஓட்டல் முதலாளியைப் பார்த்து வாடிக்கையாளர்கள் கேட்டார்கள். "அவர்கள் துறவிகள் என்று நீங்கள் எப்படிக் கண்டு கொண்டீர்கள்..."

துறவிகளின் பின்னே நடந்தபடியே, மாஜி ஓட்டல் முதலாளி இப்படிப் பதில் சொன்னார். "இவர்கள் டீ அருந்திய விதத்தைப் பார்த்தே அடையாளம் கண்டு கொண்டேன். மரியாதையோடு இரண்டு கைகளாலும் டீக்கோப்பையைப் பற்றுவதிலிருந்து அதை நன்றி பெருக்கோடும் வாஞ்சையோடும் குடிப்பது வரை அவர்கள் தங்கள் அன்பைப் பிரதிபலித்தார்கள் *"

இந்த மாஜி ஓட்டல் முதலாளி, பிற்காலத்தில் ஒரு ஜென் துறவியாக மாறினார். அது மட்டுமல்ல, தன்னுடைய ஞானக் கண்களைத் திறந்த துறவிகளின் நினைவாக அவர் "ஜென் டீ மெடிட்டேஷன்" என்ற ஒரு நவீனத் தியான முறையையும் இந்த உலகுக்கு வழங்கினார். சாp, "ஜென் டீ மெடிட்டேஷன்" என்றhல் என்ன..? நீங்கள் யூகித்தது சாpதான்.. "ஒரு கோப்பை டீயை நன்றிப் பெருக்கோடு ருசித்து, அனுபவித்து காதலோடு குடிப்பதுதான் ஜென் டீ மெடிட்டேஷன் * ஜப்பான் நாட்டில் ஜென் டீ திருவிழா ((Zen Tea Ceremony)) என்று இப்போதும் கூட நடக்கிறது * அந்தத் திருவிழாவில் அந்த நாட்டு மக்கள் ஒரு சாதாரண டீயை இரண்டு கைகளிலும் ஏந்திக் கொண்டு நன்றிப் பெருக்கோடும் வழிந்தோடும் காதலோடும் உணர்வுபூர்வமாக அருந்துவார்கள்.

ஜப்பானியர்கள் நன்றியோடு இருக்க, ஆண்டவன் அவர்களுக்கு டீ மட்டுமல்ல.. இன்னும் பல நல்ல விஷயங்களைக் கொடுத்திருக்கிறhன். ஆனால், நான் இறைவனுக்கு நன்றி சொல்ல இறைவன் பசியையும் ஏழ்மையையும் தவிர எனக்கு என்ன கொடுத்திருக்கிறhன்..? என்று நம்மில் சிலர் கேட்கக் கூடும்.

இந்தக் கேள்விக்கு சுஃபி மதம் பதில் சொல்கிறது...

இஸ்லாமிய மதத்தில் சுஃபி என்று ஒரு பிரிவு உண்டு. அப்படிப்பட்ட ஒரு பிரிவின் துறவி, தனது சீடர்களோடு ஒரு காட்டின் வழியாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறார். மண்டையைப் பிளக்கும் வெயில் செருப்பில்லாத கால்களை முட்கள் கொடுமைப்படுத்துகின்றன. எதையும் பொருட்படுத்தாது அந்தத் துறவி, காட்டின் வழியே நடந்து போய்க் கொண்டிருக்கிறhர். வழியில் தானம் கேட்டுப் பசியாறுவதற்கோ அல்லது தாகத்தைத் தீர்க்கத் தண்ணீர் குடிப்பதற்கோ எந்த வசதியும் இல்லை *

மெள்ள இரவும் வருகிறது. துறவியும் அவரது சீடர்களும் எந்த உணவும் சாப்பிடாமலேயே தூங்குவதற்காக ஆயத்தமாகிறhர்கள். அப்போது அந்த சுஃபி துறவி, ஓ ஆண்டவனே * நீ இன்று எனக்குக் கொடுத்த எல்லாவற்றுக்கும் உனக்கு நன்றி.. என்று சத்தமாக வாய் விட்டு பிரார்த்தனை செய்ய, பசியால் வதைந்து கொண்டிருக்கும் சீடர்களுக்குக் கோபம் வந்து விடுகிறது. கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவர்க்ள துறவியைப் பார்த்துக் கேட்கிறhர்கள்- ஆண்டவன் இன்று நமக்கு எதுவுமே கொடுக்கவில்லை.. ஆனால், நன்றி என்று பிரார்த்தனை செய்தீர்களே.. அதன் அர்த்தம் என்ன..?

சுஃபி துறவி சிரித்துக் கொண்டே சொன்னார் ஆண்டவன் இன்று நமக்கு எதுவுமே கொடுக்கவில்லை என்று யார் சொன்னது..? தன் குழந்தைக்கு என்ன கொடுக்கலாம்..? என்ன கொடுக்கக் கூடாது..? என்று எப்படி ஒரு தாய்க்குத் தெரியுமோ, அதே போல நமக்கு இன்று எது கொடுக்கவேண்டும்... எது கூடாது..? என்று இறைவனுக்குத் தெரியும். ஆண்டவன் இன்று நமக்குப் பசியைக் கொடுத்திருக்கிறhர். அவர் எது செய்தாலும் சரியாகத்தான் செய்வார் அதனால்தான் அவருக்கு நன்றி சொன்னேன்


இன்னும் மின்னும்...............

இறைவன் ஏன் இதயத்தில் இருக்கிறான் ?

இறைவன் ஏன் இதயத்தில் இருக்கிறான் ?

ஆண்டவன் இந்த உலகத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக ஒரு நாள் பூமிக்கு வந்தாராம். ஆண்டவனை அடையாளம் கண்டு கொண்ட பக்தர்கள,; வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை காசு கேட்டுத் துரத்தும் உள்ளூர் பிச்சைக்காரர்கள் போல ஆகிவிட்டார்கள் * "எனக்கு நிறைய நகை கொடு.. பணம் கொடு..*" என்று வகைவகையாகக் கேட்டு ஆண்டவனைத் துரத்த ஆரம்பித்ததார்கள் * இவர்களைச் சமாளிக்க முடியாமல் மண்டபம் சத்திரம், கிராமம், நகரம் என்று எங்கெங்கோ ஓடிப்பார்த்தார் ஆண்டவன் * ஆனால் அவரால் மனிதர்களின் "அதைக் கொடு.. இதைக் கொடு.." என்ற பிக்கல் பிடுங்களிலிருந்து தப்பிக்க முடியவில்லை * அவர் கோயிலை நோக்கி ஓடினாராம். அங்கேயும் தட்டு ஏந்தியவாறு எதிர் கொண்டது பிச்சைக் காரர்hகள் கூட்டம். ஆண்டவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை * கடைசியில் அவருக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது. "மனிதன்தான் உள்நோக்கிச் சிந்திப்பதே இல்லையே.. சுயமதிப்பீடும் செய்து கொள்வதில்லையே * தன்னுடைய இதயத்தைத்தான் எந்த மனிதனும் பார்ப்பதில்லையே * அதனால் அங்கே ஒளிந்து கொண்டால் யாருமே தன்னைக் கண்டு கொள்ள மாட்டார்கள்" என்று எண்ணி மனிதனின் இதயத்திலே போய் ஒளிந்து கொண்டாராம்*

"கடவுள் ஏன் நம் இதயத்தில் குடியிருக்கிறhர்..?" என்ற சீரியஸான கேள்விக்கு கிண்டலாகச் சொல்லப் படுகிற கதை இது *

"யாரிடமிருந்து எதை வாங்கலாம்.. பெறலாம்" என்ற மனநிலையிலே நம்மில் பலர் இருந்து வருகிறோம். அதனால் பிறருக்கு என்ன கொடுக்கலாம் என்றே நாம் நினைப்பது இல்லை *

தப்பித் தவறி நாம் கோயிலுக்கு ஒரு டியூப்லைட் வாங்கிக் கொடுத்தால் லைட் வெளிச்சமே வெளியில் வராத சைஸுக்கு அதன் மேல் நம் பெயரைக் கொட்டை எழுத்துக்களில் எழுதிவிடுவோம்.

இந்து சாஸ்திரப்படி ஒரு பொருளைத் தானமாகக் கொடுக்கும்போது "இனிமேல் இது என்னுடையது இல்லை *" என்று சொல்லிவிட்டுத்தான் கொடுக்க வேண்டும்.

சமஸ்கிருதத்தில் "நமமா" என்றhல், "என்னுடையது இல்லை" என்று அர்த்தம். என்னுடையது இல்லை என்று சொல்லி, ஒரு டியூப்லைட்டைக் கோயிலுக்கு தானமாகக் கொடுத்து விட்டு "இது என்னுடையது *" என்று பெருமைப்பட்டுக் கொள்வது எந்த வகையில் தர்மம்..?

யோசித்துப் பாருங்கள்.. காலையில் எழுந்தவுடன் பல் விளக்க நாம் பயன்படுத்தும் பற்பசையிலிருந்து இரவு தூங்கும் போது உபயோகப்படுத்தும் கொசுவர்த்திச் சுருள் வரை.. கண்ணுக்குத் தெரியாத யார்யாரோ நமக்காகச் செய்து கொடுத்திருக்கும் பொருட்கள் எத்தனை..? எத்தனை..?

"இந்தச் சமூகத்திடமிருந்து இத்தனை பொருட்களை இன்று பெற்றுக் கொண்ட நான,; அதற்கு பதிலாக இந்த உலகத்துக்கு என்ன கொடுத்தேன்..?; என்று யோசித்துப் பார்த்தாலே போதும்.. நாம் இந்த உலகுக்கு எவ்வளவு கடன் பட்டிருக்கிறேhம் என்பது புரியும் *

அற்புதமான இந்த வாழ்க்கையை ஆண்டவன் நமக்குக் கொடுத்திருக்கிறhர். இந்த உலகில் இருக்கும் அத்தனை தலைசிறந்த விஞ்ஞானிகளும் ஒன்று கூடி முயற்சி செய்தால் கூட உருவாக்க முடியாத அற்புதமான ஓர் உடலை நமக்கு அவர் அளித்திருக்கிறார்* நாம் உண்ணும் உணவிலிருந்து உருண்டு கொண்டிருக்கும் இந்தப் பூமிப் பந்து வரை, நமக்காக இறைவன் கொடுத்திருக்கும் பாpசுகள் எத்தனை ? இதற்கெல்லாம் நாம் இறைவனுக்குத் தினம் தினம் நன்றி சொல்கிறேhமே..? நமது வேதத்தில் இருக்கும் ஆரம்பப் பாடங்களில் முக்கியமானது "நன்றியோடு இருக்கக் கற்றுக் கொள் என்பதுதான் "நமஹ" என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு அர்த்தம் "போற்றி" என்றhலும் இதை நன்றிப் பெருக்கோடுதான் உச்சரிக்க வேண்டும் *

ஆனால், உதட்டளவில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் என்று கணக்கிலெடுத்தால், அந்த வரிசையில் முதலில் நிற்பது "நன்றி."

ஒரு முறை, நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் ஏதோ கோளாறு ஏற்பட்டு, விமானம் தள்ளாட ஆரம்பித்தது. விமானப் பணிப்பெண், பயணிகளே.. பயப்படாதீர்கள்.. விமானத்தில் சின்னக் கோளாறுதான்.. விமானி சரிசெய்து, சமாளித்து விடுவார்.." என்று தைரியம் சொல்கிறார். நேரம் போகப் போக, விமானம் கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறhகப் பறக்க ஆரம்பிக்கிறது. அப்போது, "அன்பு நிறைந்த பயணிகளே, நமது திறமைமிக்க விமானி எவ்வளவோ முயற்சி செய்தும,; விமானத்தில் இருக்கும் கோளாறை நிவர்த்தி செய்ய முடியவில்லை. அதனால், இன்னும் சில நிமிடத்தில் விமானம் வெடித்துச் சிதறி விடப் போகிறது. Any way thank you for flying with our Airlines.. (எங்கள் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ததற்கு நன்றி) என்று சொல்லி, பயணிகளை அதோகதியாக விட்டு விட்டு விமானப் பணிப்பெண் பாராட்டை மாட்டிக் கொண்டு விமானியோடு வெளியே குதித்துவிட்டாளாம் நாமும் சில சமயம் சிலரிடம் சொல்லும் "நன்றி" பயணிகளுக்கு விமானப் பணிப்பெண் சொன்ன "நன்றி" மாதிரி வெறும் சம்பிரதாயமாக இருக்கிறது*


மின்னும்..................

திருமணத்துக்கு முன் யோசியுங்கள்

திருமணத்துக்கு முன் யோசியுங்கள் *

அது மனநோயாளிகளின் மருத்துவமணை * தயாள குணம் படைத்த செல்வந்தர் ஒருவர், தன் பிறந்த தினத்தை மருத்துவமணை நோயாளிகளுக்கு உணவளித்துக் கொண்டாடுவதற்காக ஒரு நாள் அங்கு வருகிறார்.

மருத்துவமணையின் ஊழியர்கள் அவரை உள்ளே அழைத்துக் கொண்டு போகிறhர்கள். வழியில், மின் விசிறியின் மேலிருந்து ஒரு நோயாளி... லைலா, லைலா என்று கத்தியபடி தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறான் *

ஒன்றும் இல்லை, இவன் லைலா என்ற பெண்ணை உயிருக்குயிராகக் காதலித்தான். அவள் இவனை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவனைத் திருமணம் செய்துகொண்டதால், மனநோயாளியாகி விட்டான் என்று அங்கிருந்த ஊழியர்கள் சொல்கிறார்கள்.

செல்வந்தர் அவனைத் தாண்டிக் கொண்டு வேறு ஓர் அறைக்குப் போகிறார். அங்கேயும் ஒருவன், லைலா, லைலா, என்று அழுதபடி அங்கிருந்த மின் விசிறியில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறhன்.

இவனுக்கு என்ன?

ஊழியர்கள் சொன்னார்கள் இவன்தான் அந்த லைலாவைக் கல்யாணம் செய்து கொண்டவன் *

நகைச்சுவைக்காகப் புனையப்பட்ட கதைதான் இது என்றாலும் இன்று சிலருடைய காதல் - திருமண வாழ்க்கை ஏன் திருப்தி தரும் வகையில் இருப்பதில்லை என்பது ஆராயப்பட வேண்டிய விஷயமல்லவா?

முக்கியமாகத் திருமண வாழ்க்கை *

இதற்கு மிக மிக அடிப்படையான காரணம் ஒன்று உண்டு * அதாவது திருமணம் செய்து கொண்டால் சந்தோஷம் வரும் என்று நினைக்கிறோம். அது தவறு எப்படி?

விளக்கு என்பது வெளிச்சம் கிடையாது, கட்டடங்கள் எல்லாமே வீடாகி விடாது. அலமாரியில் இருக்கும் புத்தகம் அறிவு என்று ஆகிவிடாது. மருந்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலே நோய் குணமாகிவிடாது *

குடிவந்தால் அது வீடு... புத்தகத்தை எடுத்துப் படித்தால்தான் அறிவு. மருந்தைக் குடித்தால்தான் நிவாரணம்.

அதுபோல்தான் திருமணம் வாழ்க்கை, பார்த்ததும் பிடிக்கிற ஒரு பெண்ணை அல்லது ஆணைத் திருமணம் செய்து, தன் அருகில் வைத்துக் கொண்டுவிட்டாலே சந்தோஷம் வந்து விடுவதில்லை. கணவனும் மனைவியும்வேறு வேறு பாதைகளில், வேறுவேறு விருப்பங்களுடன் இருந்தால், மண வாழ்க்கை வெற்றி பெறாது ஒருத்தரை ஒருத்தர் தங்கள் வெற்றிக்கு அவர்கள் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

ஆனால், திருமணமும் சந்தோஷமும் ஒன்று என்று நினைத்துக் கல்யாணம் செய்து கொள்கிறவர்கள் திருமணத்தில் சந்தோஷத்தைத் தேடுகிறார்கள். எதிர்பார்த்த சந்தோஷம் அங்கு இல்லாதபோது ஏமாந்து போகிறார்கள் * திருமணம் என்பதும் விளக்கு மாதிரிதான். கணவனும் மனைவியும் சேர்ந்து அதை ஏற்றினால்தான் சந்தோஷம் என்ற வெளிச்சம் வரும். *

என்னைத்தேடி சில சமயம் காதல் வயப்பட்டவர்களும் வருவார்கள் * சென்ற மாதம் என்னுடைய ஆசிரமத்துக்கு ஓர் இளைஞன் வந்தான் * அவன் சொன்னான். சுவாமி நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். அவளைக் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன் *

ஏன்?- சுருக்கமாகவே கேட்டுவிட்டு அவனைப் பார்த்தேன்.

படிப்பும் இருக்கிறது * அவளின் அப்பாவும் காரில் போகிற அளவுக்கு வசதியானவர். அவளை நான் கல்யாணம் செய்து கொண்டால் எனக்குச் சுலபமாகச் சந்தோஷம் கிடைக்கும் *

அவன் தன்னுடைய காதலியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்து ஆசிரமத்தின் வராந்தாவில் உட்கார வைத்திருந்தான். அவனது காதலியை உள்ளே அழைத்து வரச் சொன்னேன்.

அவளிடம் இதே கேள்வியைக் கேட்டேன்.

நீ ஏன் இவனைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறhய்?

என் காதலர் நாகாpகமானவர்.. பண்புடையவர். நகைச்சுவை உணர்வும் நிறைய இருக்கிறது. கடுமையான சொந்த உழைப்பால் சீக்கிரத்திலேயே முன்னுக்கு வந்து விடுவார். ஆகமொத்தத்தில் அவரால் எனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்க முடியும் *

மேலோட்டமாக இந்த ஜோடியை யார் பார்த்தாலும் "Made for each other" பட்டம் கொடுத்து விடுவார்கள் * ஆனால், எனக்கு மட்டும் இவர்கள் இதே மனநிலையில் திருமணம் செய்து கொண்டால், திருமண வாழ்க்கையில் முழுமையாகச் சந்தோஷம் அடைய மாட்டார்கள் என்று பட்டது * அவர்கள் இருவருக்கும் சொன்ன சில கருத்துக்களை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்குச் சந்தோஷத்தைப் பிச்சை போடு * என்று காதலியிடம் கை நீட்டும் காதலனும்.. இல்லை .. நீதான் என்னைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று காதலனிடம் கை நீட்டும் காதலியும் திருமணம் செய்து கொண்டால் என்ன நடக்கும்? சந்தோஷத்தைப் பிச்சை எடுக்கும் ஒரு பிச்சைக்காரனால், இன்னொரு பிச்சைக்காரனுக்கு எப்படி சந்தோஷத்தை தானமாகக் கொடுக்க முடியும்?

ஆகவே, திருமணப் பந்தலுக்குள் அடியெடுத்து வைக்கும் மணமக்களே.. உங்களைக் கைப்பிடிக்கப் போகிறவர் எப்படி உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பார் என்று யோசிக்காதீர்கள் அவருக்கு நீங்கள் எப்படி சந்தோஷம் கொடுக்கப் போகிறீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

சாதாரணமான ஒரு பொருளையே எடுத்துக் கொள்ளுங்கள் * ஒரு பொருளைப் பரிசாகப் பெறுவதில் நமக்கு ஒரு மடங்கு சந்தோஷம் கிடைக்கிறது என்றால், ஒரு பொருளை மற்றவர்களுக்குப் பரிசாகக் கொடுப்பதில் நமக்குக் கிடைக்கும் சந்தோஷம் அதைவிடப் பல மடங்கு இல்லையா?

ஈத்துவத்துக்கும் இன்பம் பற்றி திருவள்ளுவர் சொல்லியிருப்பதை என்னைப் போல ஆங்கில மொழிபெயர்ப்பில் படிக்காமல், நேரடியாக தமிழிலேயே படிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் நீங்கள் அதனால் இது பற்றி உங்களுக்கு அதிகமாகச் சொல்லத் தேவையில்லை. ஆகவே. கணவன் - மனைவி இடையே ஏற்படக் கூடிய அடுத்த பிரச்னைக்கு போகிறேன்.

துன்பக் கணக்கு

துன்பக் கணக்கு *

ஆண், பெண், சிறியவர், பொpயவர், என்று அது யாராக இருந்தாலும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு மாபெரும் சக்தி புதைந்து கிடக்கிறது.

கோடைகாலம், இலையுதிர்க்காலம், வசந்தகாலம், மழைகாலம் என்று பூமிக்கு வேண்டுமானால் பருவ காலங்கள் மாறி மாறி வரலாம். ஆனால், சூரியனுக்கு எந்தப் பருவமும் கிடையாது.

அது போல் உடம்புக்குத்தான் குழந்தைப் பருவம் இளமைப் பருவம், வயோதிகப் பருவம் எல்லாம், மனசுக்கு எந்தப் பக்குவமும் கிடையாது. நாம் நம் மனதை எந்தக் காலகட்டத்திலும் துடிப்புடனும் மகிழ்ச்சியுடனும் வைத்துக் கொள்ள முடியும்.

பேசுவதற்கும். கேட்பதற்கும் நன்றhக இருக்கிறது ஆனால், இது சாத்தியமா?

நூறு சதவிகிதம் சாத்தியம். ஆனால், இதற்கு நாம் பயிற்சி பெற வேண்டும் நிறைய பார்க்க வேண்டும் நிறைய கேட்க வேண்டும்.

சுவாமி என்ன பேசுகிறீர்கள்? எல்லோருக்கும்தான் கண்களும் காதுகளும் இருக்கின்றன. எல்லோரும்தான் பார்க்கிறhர்கள், கேட்கிறhர்கள். ஆனால், எல்லோருமேவா ஓவியராகவும் எழுத்தாளராகவும் இருக்கிறேhம்? பேனாவும் பென்சிலும் எப்படி ஒரு கருவியோ, அதே மாதிhpதான் கண்ணும் காதும் * பேனாவையும் பென்சிலையும் பயன்படுத்தத் தொpந்தால் தான் ஓவியன். அதே மாதிhp கண்களும் காதுகளும் வெறும் கருவிகள்தான். இவற்றைச் சாpயான வகையில் பயன்படுத்தினால் தான் மகிழ்ச்சி, துடிப்பு, சந்தோஷம்...*

ஆனால். நம்மில் பலருக்கு எதிரில் இருப்பதைவிடக் கண்ணுக்கு எதிரில் இல்லாததுதான் அதிகமாகத் தொpகிறது.

இத்தாலி நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் அவர். அவருக்கு ஒரே மகன் * அன்று அவனுக்குப் பிறந்த நாள் தன் மகனின் சந்தோஷத்துக்காக அவர் எத்தனையோ நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார். எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக ஒரு பெரிய ஃபுட்பால் மாட்சையும் ஏற்பாடு செய்திருந்தார்.

மைதானம் முழுவதும் நிரம்பி வழிந்த கூட்டம். இத்தாலி நாட்டின் மிகப்பொpய இரண்டு ஃபுட்பால் டீம்கள் ஆக்ரோஷமாக மோதியதைப் பார்த்து கூட்டம் சந்தோஷத்தில் துள்ளித் துள்ளி ஆர்ப்பாpத்தது. ஆனால், அந்தச் செல்வச் சீமானின் மகன் மட்டும் கன்னத்தில் கை வைத்தபடி ஆட்டத்தைச் சோகமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

மகனின் மகிழ்ச்சிக்காகப் பல கோடி ரூபாய் செலவு செய்து ஃபுட்பால் மாட்ச்சுக்கு ஏற்பாடு செய்த அப்பாவை பார்த்து மகன் சொன்னான்.

அப்பா தங்களுக்கு இருந்தாலும் இத்தனை கருமித்தனம் கூடாது *

பணக்கார அப்பாவுக்கு மகன் சொல்வது புhpயவில்லை. கேள்விக்குறியோடு மகனைப் பார்த்தார். மகன் சொன்னான்.

மண்டையைப் பிளக்கும் வெயிலில் ஒரே ஒரு பந்தை விரட்டிக் கொண்டு எத்தனை பேர் ஓடுகிறhர்கள். பாருங்கள் உங்களிடம் பணமா இல்லை. இவர்களுக்கு ஆளுக்கொரு பந்து வாங்கிக் கொடுத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியோடு உதைத்து விளையாடியிருப்பார்கள் அல்லவா ? *

நாம்கூடப் பல சமயம் இந்தச் சிறுவனைப் போலத்தான் நம் முன்னால் நிகழும் பல சம்பவங்களில் இருக்கிற உற்சாகமான அம்சத்தை, தெம்பூட்டும் விஷயத்தை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் துளி கூட அர்த்தமில்லாத விஷயங்களை நினைத்துக் கஷ்டப் பட்டு வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறேhம்.

அண்மையில் ஒரு நாள் பெங்களுரில் இருக்கும் என் ஆசிரமத்துக்கு இளைஞர் ஒருவர் வந்திருந்தார்.

தன் பெற்றோர் தனக்குச் செய்த பொpய அநீதியால் வாழ்க்கை நாசமாகிப் போய்விட்டதாக மணிக்கணக்கில் குறைபட்டுக் கொண்ட விஷயம் இதுதான் *

அவர் சிறுவனாக இருந்தபோது பெற்றேhர் அவரை இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலில் படிக்க வைக்கவில்லையாம். அதனால் அவரால் இங்கிலீஷில் சரளமாகப் பேச முடியவில்லை. வேலை செய்யும் இடத்தில் இதனால் தாழ்வுமனப்பான்மையுடன் இருக்க வேண்டியிருக்கிறதாம்.

ஒரு மணி நேரம் அவர் என்னிடம் பேசியதிலிருந்தே இன்னொரு விஷயமும் தொpந்தது.

இந்த இளைஞர் இப்போது வேலை பார்க்கும் நிறுவனத்தில்தான் அவரது தந்தையும் பணி புhpந்து ஓய்வு பெற்றிருக்கிறhர் இந்த இளைஞருக்கே ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் இந்த நிறுவனத்தில் வேலையே கிடைத்திருக்கிறது.

இதே போல இவரது தாய், தந்தையால் தான் நகரின் மையப்பகுதியில் சொந்த வீடு, நல்ல மனைவி என்று இவருக்குப் பல விஷயங்களுக்கு கிடைத்திருக்கின்றன. ஆனால், இவருக்கோ தன் வாழ்க்கையில் என்ன கிடைக்கவில்லை என்பதை மட்டும்தான் பார்க்க முடிகிறது.

எதையெல்லாம் நினைத்து சந்தோஷப்படலாம் என்பதை விட்டு விட்டு எதையெல்லாம் நினைத்துக் கஷ்டப்படலாம் என்று தேடித் தேடி பூதகண்ணாடி வைத்துப் பொpதுபடுத்திப் பார்த்து கஷ்டப்படும் இது போன்ற நபர்கள் நிறையவே இருக்கிறhர்கள். மனைவி மக்கள் ஆசைக்காக குற்றலாத்துக்கு டூர் போனால்கூட அருவியையும,; சாரலையும் இவர்கள் ரசிக்க மாட்டார்கள். டூர் வந்ததில் எவ்வளவு பணம் செலவானது என்று கணக்குப் போட்டு அடிக்கடி எரிந்து விழுந்து இன்பச் சுற்றுலாவைத் துன்பச் சுற்றுலாவாக மாற்றிவிடுவார்கள்.

சரி.. நம் சக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது எப்படி என்ற விஷயத்துக்கு இதோ வந்துவிட்டேன் *--