Thursday, October 30, 2008

இலக்கின்றி பறக்கும் சிந்தனைப் பறவை *

வாழ்கiயில் நம்மிடமிருந்து பிரிக்க முடியாத செல்வம் எது ? - என்னுடைய வாழ்வியல் பயிற்சி முகாமுக்கு வருபவர்களிடம் நான் வழக்கமாகக் கேட்கும் கேள்வி இது *

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்வார்கள். நான் சொல்வது - இந்தக் கணம்.. இந்த விநாடி.. இதுதான் நிலையானது. இந்த விநாடியை யாருமே நம்மிடமிருந்து பிhpக்க முடியாது. ஆனால், ஞஇந்தக் கணத்தைஞ இதோ நம்மைக் கடந்து போய்க் கொண்டிருக்கும் இந்த விநாடியை நம்மில் பலர் முழுமையாக அனுபவிப்பதில்லை என்பதுதான் நெஞ்சைச் சுடும் உண்மை. ஏனென்றhல், நமது சிந்தனை பாதி வேளை, கடந்த காலத்தில் நிலைத்து இருக்கிறது.. அல்லது அது வருங்காலத்தைப் பற்றிய கவலையில் தோய்ந்து போயிருக்கிறது.

வீட்டில் இருக்கும்போது, ஆபீஸைப் பற்றிச் சிந்திக்கிறோம். சாப்பிடும்போது கூட நமது சிந்தனை சாப்பாட்டில் இருப்பதில்லை. குளிக்கும்போது கூட, ஆண்டவன் நமக்குக் கொடுத்திருக்கும் அற்புதமான உடம்பை நாம் பார்த்து ரசிப்பதில்லை. அது இன்றைய தேதிக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருப்பதை எண்ணி சந்தோஷப்படுவதில்லை. அப்போதுகூட இலக்கில்லாமல் பறக்கும் பறவையாக மாறி எங்கேயோ சிறகடிக்கிறது * இதனால் ஏற்படும் விளைவு என்ன என்று சிந்தித்துப் பாருங்கள் * எதைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டு ரோட்டில் வாகனம் ஓட்டினால் விபத்து ஏற்படுகிறதே. அதே மாதிரி விபத்துக்கள் நம் வாழக்கையில் வேறுவேறு விதமாக நடந்து விடும். இப்படி நான் சொல்வதால், இறந்தகாலத்து நினைவுகளைப் புறக்கணிக்கச் சொல்லவில்லை. வருங்காலத்தைப் பற்றித் திட்டம் போட வேண்டாம் என்றும் தடுக்கவில்லை. ஆவி பறக்கும் சூடான ஃபில்டர் காபியைச் ருசித்து ருசித்து அதன் ஒவ்வொரு துளியையும் நாக்கின் சுவை மொட்டுக்களால் உணர்ந்து சாப்பிடுவதைப் போலத்தான் ஆண்டவன் நமக்கு அளித்திருக்கும் வாழ்;க்கையையும் விநாடி, விநாடியாக அனுபவிக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

வாழ்க்கை என்பது காபியைவிடப் பல ஆயிரம் மடங்கு சுவையானது. காபியின் முதல் சிப்புக்கும் இரண்டாவது சிப்புக்கும் அதிக வித்தியாசம் இருப்பதில்லை. ஆனால், வாழ்க்கையில் ஒரு விநாடியைப் போல் அடுத்த விநாடி இருப்பதில்லை. ஒவ்வொரு விநாடியும் வித்தியாசமானது. ஒரே நதியில் நீ இரண்டு முறை குளிக்க முடியாது என்று ஜென் புத்திசத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது, நதியில் ஒர் இடத்தில் ஓடுகிற நீர். அடுத்த விநாடி வேறு இடத்துக்கு மாறி விடுவது மாதிரி. வாழ்க்கையும் விநாடிக்கு விநாடி மாறிக் கொண்டே இருக்கிறது.

படிப்பு, அறிவு, ஆற்றல் மட்டும் இருந்தால் போதாது, நிகழ்காலத்துக்கு ஏற்ப விழிப்பு உணர்வும் வேண்டும். விழிப்பு உணர்வு மட்டும் இல்லையென்றhல் ஒருவன் எத்தனை திறமைகள் படைத்திருந்தாலும். அது அவனுக்குப் பலன் தராமல் போய்விடும். அதனால்தான் பொpய கம்பெனிகளில் வேலைக்கு மனுச் செய்திருப்பவர்களுக்கு Presence of Mind இருக்கிறதா என்று பல்வேறு விதங்களில் சோதனை செய்கிறார்கள்.

ஒரு பெரிய இசை வித்தகர் இருந்தார். அவர் வயலினை எடுத்து வாசித்தால். பாலைவனத்தில்கூட மழை பெய்யும். ஒரு முறை அவர் ஒரு சர்க்கஸ் கூடாரத்துக்குப் போயிருந்தார். அங்கே ஒரு சர்க்கஸ் கலைஞர் வயலின் வாசிக்க, கரடி டான்ஸ் ஆடியது, சர்க்கஸ் பார்க்க வந்திருந்தவர்கள் ஒட்டு மொத்தமாக எழுப்பிய கரகோக்ஷம் கூடாரத்தையே அதிர வைத்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த நமது வயலின் வித்தகர். அந்த சர்க்கஸ் கலைஞரை அணுகி. ஞநன்கு பழக்கப்பட்ட கரடியை மட்டும்தான் உன் வயலின் இசைக்கு ஏற்ப உன்னால் டான்ஸ் ஆட வைக்க முடியும். ஆனால், என் வயலின் இசை. எந்த மிருகத்தையும் நடனமாட வைக்கும்ஞ என்று கூறினார். சர்க்கஸ் கலைஞர் அதைப் பேத்தல் என்று மறுக்க இருவருக்கும் இடையே பேச்சு வளர்ந்து, அங்கே ஒரு போட்டியே ஆரம்பமானது.

வயலின் வித்வானின் எதிரில் சர்க்கஸ் கலைஞர், முதலில் ஒரு சிங்கத்தை அனுப்பினார். வித்வானின் வயலின் இசை கேட்டுச் சிங்கம் சுற்றிச் சுழன்று ஆடத் தொடங்கியது. சர்க்கஸ் கலைஞர், அடுத்த ஒரு சிறுத்தையை அனுப்பினார். அதுவும் வித்வானின் வயலின் இசைக்குத் தன்னை மறந்து ஆடியது. சர்க்கஸ் கலைஞர் அடுத்து ஒரு புலியை அனுப்பினார் வயலின் வித்வான் சற்றும் பதறhமல் வயலினை வாசிக்கத் தொடங்கினார் ஆனால், அந்தப் பாழும் புலி, வயலின் இசைக்கு மயங்கவில்லை, மாறாக அது வித்வானை நோக்கி ரத்த வெறியோடு நாலு கால் பாய்ச்சலில் ஓடி வந்தது, பதறிப்போன பார்வையாளர்கள் கூட்டம் சிதறி ஓடியது. நமது வித்வானும் தனது வயலினைக் காற்றிலே வீசிவிட்டு கடைசி நிமிடத்தில் தலைதெறிக்க ஓடி, அதிர்ஷ்டவசமாக அந்தப் புலியிடம் இருந்து தப்பித்துக் கொண்டார்.

புலி, பயிற்சியாளர்களால் சாமார்த்தியமாக மீண்டும் கூண்டில் அடைக்கப்பட்டது, மரண பயத்திலிருந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட வயலின் வித்வான், சர்க்கஸ் கலைஞரிடம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார் என்றாலும், தனது இசை அந்தப் புலியைக் கட்டுப் படுத்தாது தனக்குப் பொpய புதிராகவே இருப்பதாக அவர் சொல்ல சர்க்கஸ் கலைஞர் சிhpத்தபடியே கூறினார்.

காரணம் ரொம்ப எளிமையானது, அது செவிட்டுப் புலி அதுமட்டுமல்ல, பிறவியிலேயே அதற்குக் காது துவாரமும்... ஏன், காது மடல்களே கூடக் கிடையாது. வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் கூட புலிக்குக் காது இல்லை என்பதைச் சில விநாடிகளுக்குள் கவனித்து தப்பிக்க முயன்று ஓடியது. ஆனால், உங்கள் வாசிப்பின் மீது வைத்த அபார நம்பிக்கையால், நீங்கள் கடைசி நிமிடம் வரை கண் திறந்து புலியைச் சரியாகப் பார்க்கத் தவறிவிட்டீர்கள் *

துன்பக் கணக்கு

ஆண், பெண், சிறியவர், பொpயவர், என்று அது யாராக இருந்தாலும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு மாபெரும் சக்தி புதைந்து கிடக்கிறது.

கோடைகாலம், இலையுதிர்க்காலம், வசந்தகாலம், மழைகாலம் என்று பூமிக்கு வேண்டுமானால் பருவ காலங்கள் மாறி மாறி வரலாம். ஆனால், சூரியனுக்கு எந்தப் பருவமும் கிடையாது.

அது போல் உடம்புக்குத்தான் குழந்தைப் பருவம் இளமைப் பருவம், வயோதிகப் பருவம் எல்லாம், மனசுக்கு எந்தப் பக்குவமும் கிடையாது. நாம் நம் மனதை எந்தக் காலகட்டத்திலும் துடிப்புடனும் மகிழ்ச்சியுடனும் வைத்துக் கொள்ள முடியும்.

பேசுவதற்கும். கேட்பதற்கும் நன்றhக இருக்கிறது ஆனால், இது சாத்தியமா?

நூறு சதவிகிதம் சாத்தியம். ஆனால், இதற்கு நாம் பயிற்சி பெற வேண்டும் நிறைய பார்க்க வேண்டும் நிறைய கேட்க வேண்டும்.

சுவாமி என்ன பேசுகிறீர்கள்? எல்லோருக்கும்தான் கண்களும் காதுகளும் இருக்கின்றன. எல்லோரும்தான் பார்க்கிறhர்கள், கேட்கிறhர்கள். ஆனால், எல்லோருமேவா ஓவியராகவும் எழுத்தாளராகவும் இருக்கிறேhம்? பேனாவும் பென்சிலும் எப்படி ஒரு கருவியோ, அதே மாதிhpதான் கண்ணும் காதும் * பேனாவையும் பென்சிலையும் பயன்படுத்தத் தொpந்தால் தான் ஓவியன். அதே மாதிhp கண்களும் காதுகளும் வெறும் கருவிகள்தான். இவற்றைச் சாpயான வகையில் பயன்படுத்தினால் தான் மகிழ்ச்சி, துடிப்பு, சந்தோஷம்...*

ஆனால். நம்மில் பலருக்கு எதிரில் இருப்பதைவிடக் கண்ணுக்கு எதிரில் இல்லாததுதான் அதிகமாகத் தொpகிறது.

இத்தாலி நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் அவர். அவருக்கு ஒரே மகன் * அன்று அவனுக்குப் பிறந்த நாள் தன் மகனின் சந்தோஷத்துக்காக அவர் எத்தனையோ நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார். எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக ஒரு பெரிய ஃபுட்பால் மாட்சையும் ஏற்பாடு செய்திருந்தார்.

மைதானம் முழுவதும் நிரம்பி வழிந்த கூட்டம். இத்தாலி நாட்டின் மிகப்பொpய இரண்டு ஃபுட்பால் டீம்கள் ஆக்ரோஷமாக மோதியதைப் பார்த்து கூட்டம் சந்தோஷத்தில் துள்ளித் துள்ளி ஆர்ப்பாpத்தது. ஆனால், அந்தச் செல்வச் சீமானின் மகன் மட்டும் கன்னத்தில் கை வைத்தபடி ஆட்டத்தைச் சோகமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

மகனின் மகிழ்ச்சிக்காகப் பல கோடி ரூபாய் செலவு செய்து ஃபுட்பால் மாட்ச்சுக்கு ஏற்பாடு செய்த அப்பாவை பார்த்து மகன் சொன்னான்.

அப்பா தங்களுக்கு இருந்தாலும் இத்தனை கருமித்தனம் கூடாது *

பணக்கார அப்பாவுக்கு மகன் சொல்வது புhpயவில்லை. கேள்விக்குறியோடு மகனைப் பார்த்தார். மகன் சொன்னான்.

மண்டையைப் பிளக்கும் வெயிலில் ஒரே ஒரு பந்தை விரட்டிக் கொண்டு எத்தனை பேர் ஓடுகிறhர்கள். பாருங்கள் உங்களிடம் பணமா இல்லை. இவர்களுக்கு ஆளுக்கொரு பந்து வாங்கிக் கொடுத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியோடு உதைத்து விளையாடியிருப்பார்கள் அல்லவா ? *

நாம்கூடப் பல சமயம் இந்தச் சிறுவனைப் போலத்தான் நம் முன்னால் நிகழும் பல சம்பவங்களில் இருக்கிற உற்சாகமான அம்சத்தை, தெம்பூட்டும் விஷயத்தை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் துளி கூட அர்த்தமில்லாத விஷயங்களை நினைத்துக் கஷ்டப் பட்டு வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறேhம்.

அண்மையில் ஒரு நாள் பெங்களுரில் இருக்கும் என் ஆசிரமத்துக்கு இளைஞர் ஒருவர் வந்திருந்தார்.

தன் பெற்றோர் தனக்குச் செய்த பொpய அநீதியால் வாழ்க்கை நாசமாகிப் போய்விட்டதாக மணிக்கணக்கில் குறைபட்டுக் கொண்ட விஷயம் இதுதான் *

அவர் சிறுவனாக இருந்தபோது பெற்றேhர் அவரை இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலில் படிக்க வைக்கவில்லையாம். அதனால் அவரால் இங்கிலீஷில் சரளமாகப் பேச முடியவில்லை. வேலை செய்யும் இடத்தில் இதனால் தாழ்வுமனப்பான்மையுடன் இருக்க வேண்டியிருக்கிறதாம்.

ஒரு மணி நேரம் அவர் என்னிடம் பேசியதிலிருந்தே இன்னொரு விஷயமும் தொpந்தது.

இந்த இளைஞர் இப்போது வேலை பார்க்கும் நிறுவனத்தில்தான் அவரது தந்தையும் பணி புhpந்து ஓய்வு பெற்றிருக்கிறhர் இந்த இளைஞருக்கே ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் இந்த நிறுவனத்தில் வேலையே கிடைத்திருக்கிறது.

இதே போல இவரது தாய், தந்தையால் தான் நகரின் மையப்பகுதியில் சொந்த வீடு, நல்ல மனைவி என்று இவருக்குப் பல விஷயங்களுக்கு கிடைத்திருக்கின்றன. ஆனால், இவருக்கோ தன் வாழ்க்கையில் என்ன கிடைக்கவில்லை என்பதை மட்டும்தான் பார்க்க முடிகிறது.

எதையெல்லாம் நினைத்து சந்தோஷப்படலாம் என்பதை விட்டு விட்டு எதையெல்லாம் நினைத்துக் கஷ்டப்படலாம் என்று தேடித் தேடி பூதகண்ணாடி வைத்துப் பொpதுபடுத்திப் பார்த்து கஷ்டப்படும் இது போன்ற நபர்கள் நிறையவே இருக்கிறhர்கள். மனைவி மக்கள் ஆசைக்காக குற்றலாத்துக்கு டூர் போனால்கூட அருவியையும,; சாரலையும் இவர்கள் ரசிக்க மாட்டார்கள். டூர் வந்ததில் எவ்வளவு பணம் செலவானது என்று கணக்குப் போட்டு அடிக்கடி எரிந்து விழுந்து இன்பச் சுற்றுலாவைத் துன்பச் சுற்றுலாவாக மாற்றிவிடுவார்கள்.

சரி.. நம் சக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது எப்படி என்ற விஷயத்துக்கு இதோ வந்துவிட்டேன் *--

திருமணத்துக்கு முன் யோசியுங்கள்

அது மனநோயாளிகளின் மருத்துவமணை * தயாள குணம் படைத்த செல்வந்தர் ஒருவர், தன் பிறந்த தினத்தை மருத்துவமணை நோயாளிகளுக்கு உணவளித்துக் கொண்டாடுவதற்காக ஒரு நாள் அங்கு வருகிறார்.

மருத்துவமணையின் ஊழியர்கள் அவரை உள்ளே அழைத்துக் கொண்டு போகிறhர்கள். வழியில், மின் விசிறியின் மேலிருந்து ஒரு நோயாளி... லைலா, லைலா என்று கத்தியபடி தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறான் *

ஒன்றும் இல்லை, இவன் லைலா என்ற பெண்ணை உயிருக்குயிராகக் காதலித்தான். அவள் இவனை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவனைத் திருமணம் செய்துகொண்டதால், மனநோயாளியாகி விட்டான் என்று அங்கிருந்த ஊழியர்கள் சொல்கிறார்கள்.

செல்வந்தர் அவனைத் தாண்டிக் கொண்டு வேறு ஓர் அறைக்குப் போகிறார். அங்கேயும் ஒருவன், லைலா, லைலா, என்று அழுதபடி அங்கிருந்த மின் விசிறியில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறhன்.

இவனுக்கு என்ன?

ஊழியர்கள் சொன்னார்கள் இவன்தான் அந்த லைலாவைக் கல்யாணம் செய்து கொண்டவன் *

நகைச்சுவைக்காகப் புனையப்பட்ட கதைதான் இது என்றாலும் இன்று சிலருடைய காதல் - திருமண வாழ்க்கை ஏன் திருப்தி தரும் வகையில் இருப்பதில்லை என்பது ஆராயப்பட வேண்டிய விஷயமல்லவா?

முக்கியமாகத் திருமண வாழ்க்கை *

இதற்கு மிக மிக அடிப்படையான காரணம் ஒன்று உண்டு * அதாவது திருமணம் செய்து கொண்டால் சந்தோஷம் வரும் என்று நினைக்கிறோம். அது தவறு எப்படி?

விளக்கு என்பது வெளிச்சம் கிடையாது, கட்டடங்கள் எல்லாமே வீடாகி விடாது. அலமாரியில் இருக்கும் புத்தகம் அறிவு என்று ஆகிவிடாது. மருந்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலே நோய் குணமாகிவிடாது *

குடிவந்தால் அது வீடு... புத்தகத்தை எடுத்துப் படித்தால்தான் அறிவு. மருந்தைக் குடித்தால்தான் நிவாரணம்.

அதுபோல்தான் திருமணம் வாழ்க்கை, பார்த்ததும் பிடிக்கிற ஒரு பெண்ணை அல்லது ஆணைத் திருமணம் செய்து, தன் அருகில் வைத்துக் கொண்டுவிட்டாலே சந்தோஷம் வந்து விடுவதில்லை. கணவனும் மனைவியும்வேறு வேறு பாதைகளில், வேறுவேறு விருப்பங்களுடன் இருந்தால், மண வாழ்க்கை வெற்றி பெறாது ஒருத்தரை ஒருத்தர் தங்கள் வெற்றிக்கு அவர்கள் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

ஆனால், திருமணமும் சந்தோஷமும் ஒன்று என்று நினைத்துக் கல்யாணம் செய்து கொள்கிறவர்கள் திருமணத்தில் சந்தோஷத்தைத் தேடுகிறார்கள். எதிர்பார்த்த சந்தோஷம் அங்கு இல்லாதபோது ஏமாந்து போகிறார்கள் * திருமணம் என்பதும் விளக்கு மாதிரிதான். கணவனும் மனைவியும் சேர்ந்து அதை ஏற்றினால்தான் சந்தோஷம் என்ற வெளிச்சம் வரும். *

என்னைத்தேடி சில சமயம் காதல் வயப்பட்டவர்களும் வருவார்கள் * சென்ற மாதம் என்னுடைய ஆசிரமத்துக்கு ஓர் இளைஞன் வந்தான் * அவன் சொன்னான். சுவாமி நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். அவளைக் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன் *

ஏன்?- சுருக்கமாகவே கேட்டுவிட்டு அவனைப் பார்த்தேன்.

படிப்பும் இருக்கிறது * அவளின் அப்பாவும் காரில் போகிற அளவுக்கு வசதியானவர். அவளை நான் கல்யாணம் செய்து கொண்டால் எனக்குச் சுலபமாகச் சந்தோஷம் கிடைக்கும் *

அவன் தன்னுடைய காதலியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்து ஆசிரமத்தின் வராந்தாவில் உட்கார வைத்திருந்தான். அவனது காதலியை உள்ளே அழைத்து வரச் சொன்னேன்.

அவளிடம் இதே கேள்வியைக் கேட்டேன்.

நீ ஏன் இவனைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறhய்?

என் காதலர் நாகாpகமானவர்.. பண்புடையவர். நகைச்சுவை உணர்வும் நிறைய இருக்கிறது. கடுமையான சொந்த உழைப்பால் சீக்கிரத்திலேயே முன்னுக்கு வந்து விடுவார். ஆகமொத்தத்தில் அவரால் எனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்க முடியும் *

மேலோட்டமாக இந்த ஜோடியை யார் பார்த்தாலும் "Made for each other" பட்டம் கொடுத்து விடுவார்கள் * ஆனால், எனக்கு மட்டும் இவர்கள் இதே மனநிலையில் திருமணம் செய்து கொண்டால், திருமண வாழ்க்கையில் முழுமையாகச் சந்தோஷம் அடைய மாட்டார்கள் என்று பட்டது * அவர்கள் இருவருக்கும் சொன்ன சில கருத்துக்களை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்குச் சந்தோஷத்தைப் பிச்சை போடு * என்று காதலியிடம் கை நீட்டும் காதலனும்.. இல்லை .. நீதான் என்னைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று காதலனிடம் கை நீட்டும் காதலியும் திருமணம் செய்து கொண்டால் என்ன நடக்கும்? சந்தோஷத்தைப் பிச்சை எடுக்கும் ஒரு பிச்சைக்காரனால், இன்னொரு பிச்சைக்காரனுக்கு எப்படி சந்தோஷத்தை தானமாகக் கொடுக்க முடியும்?

ஆகவே, திருமணப் பந்தலுக்குள் அடியெடுத்து வைக்கும் மணமக்களே.. உங்களைக் கைப்பிடிக்கப் போகிறவர் எப்படி உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பார் என்று யோசிக்காதீர்கள் அவருக்கு நீங்கள் எப்படி சந்தோஷம் கொடுக்கப் போகிறீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

சாதாரணமான ஒரு பொருளையே எடுத்துக் கொள்ளுங்கள் * ஒரு பொருளைப் பரிசாகப் பெறுவதில் நமக்கு ஒரு மடங்கு சந்தோஷம் கிடைக்கிறது என்றால், ஒரு பொருளை மற்றவர்களுக்குப் பரிசாகக் கொடுப்பதில் நமக்குக் கிடைக்கும் சந்தோஷம் அதைவிடப் பல மடங்கு இல்லையா?

ஈத்துவத்துக்கும் இன்பம் பற்றி திருவள்ளுவர் சொல்லியிருப்பதை என்னைப் போல ஆங்கில மொழிபெயர்ப்பில் படிக்காமல், நேரடியாக தமிழிலேயே படிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் நீங்கள் அதனால் இது பற்றி உங்களுக்கு அதிகமாகச் சொல்லத் தேவையில்லை. ஆகவே. கணவன் - மனைவி இடையே ஏற்படக் கூடிய அடுத்த பிரச்னைக்கு போகிறேன்.

இறைவன் ஏன் இதயத்தில் இருக்கிறான் ?

ஆண்டவன் இந்த உலகத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக ஒரு நாள் பூமிக்கு வந்தாராம். ஆண்டவனை அடையாளம் கண்டு கொண்ட பக்தர்கள,; வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை காசு கேட்டுத் துரத்தும் உள்ளூர் பிச்சைக்காரர்கள் போல ஆகிவிட்டார்கள் * "எனக்கு நிறைய நகை கொடு.. பணம் கொடு..*" என்று வகைவகையாகக் கேட்டு ஆண்டவனைத் துரத்த ஆரம்பித்ததார்கள் * இவர்களைச் சமாளிக்க முடியாமல் மண்டபம் சத்திரம், கிராமம், நகரம் என்று எங்கெங்கோ ஓடிப்பார்த்தார் ஆண்டவன் * ஆனால் அவரால் மனிதர்களின் "அதைக் கொடு.. இதைக் கொடு.." என்ற பிக்கல் பிடுங்களிலிருந்து தப்பிக்க முடியவில்லை * அவர் கோயிலை நோக்கி ஓடினாராம். அங்கேயும் தட்டு ஏந்தியவாறு எதிர் கொண்டது பிச்சைக் காரர்hகள் கூட்டம். ஆண்டவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை * கடைசியில் அவருக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது. "மனிதன்தான் உள்நோக்கிச் சிந்திப்பதே இல்லையே.. சுயமதிப்பீடும் செய்து கொள்வதில்லையே * தன்னுடைய இதயத்தைத்தான் எந்த மனிதனும் பார்ப்பதில்லையே * அதனால் அங்கே ஒளிந்து கொண்டால் யாருமே தன்னைக் கண்டு கொள்ள மாட்டார்கள்" என்று எண்ணி மனிதனின் இதயத்திலே போய் ஒளிந்து கொண்டாராம்*

"கடவுள் ஏன் நம் இதயத்தில் குடியிருக்கிறhர்..?" என்ற சீரியஸான கேள்விக்கு கிண்டலாகச் சொல்லப் படுகிற கதை இது *

"யாரிடமிருந்து எதை வாங்கலாம்.. பெறலாம்" என்ற மனநிலையிலே நம்மில் பலர் இருந்து வருகிறோம். அதனால் பிறருக்கு என்ன கொடுக்கலாம் என்றே நாம் நினைப்பது இல்லை *

தப்பித் தவறி நாம் கோயிலுக்கு ஒரு டியூப்லைட் வாங்கிக் கொடுத்தால் லைட் வெளிச்சமே வெளியில் வராத சைஸுக்கு அதன் மேல் நம் பெயரைக் கொட்டை எழுத்துக்களில் எழுதிவிடுவோம்.

இந்து சாஸ்திரப்படி ஒரு பொருளைத் தானமாகக் கொடுக்கும்போது "இனிமேல் இது என்னுடையது இல்லை *" என்று சொல்லிவிட்டுத்தான் கொடுக்க வேண்டும்.

சமஸ்கிருதத்தில் "நமமா" என்றhல், "என்னுடையது இல்லை" என்று அர்த்தம். என்னுடையது இல்லை என்று சொல்லி, ஒரு டியூப்லைட்டைக் கோயிலுக்கு தானமாகக் கொடுத்து விட்டு "இது என்னுடையது *" என்று பெருமைப்பட்டுக் கொள்வது எந்த வகையில் தர்மம்..?

யோசித்துப் பாருங்கள்.. காலையில் எழுந்தவுடன் பல் விளக்க நாம் பயன்படுத்தும் பற்பசையிலிருந்து இரவு தூங்கும் போது உபயோகப்படுத்தும் கொசுவர்த்திச் சுருள் வரை.. கண்ணுக்குத் தெரியாத யார்யாரோ நமக்காகச் செய்து கொடுத்திருக்கும் பொருட்கள் எத்தனை..? எத்தனை..?

"இந்தச் சமூகத்திடமிருந்து இத்தனை பொருட்களை இன்று பெற்றுக் கொண்ட நான,; அதற்கு பதிலாக இந்த உலகத்துக்கு என்ன கொடுத்தேன்..?; என்று யோசித்துப் பார்த்தாலே போதும்.. நாம் இந்த உலகுக்கு எவ்வளவு கடன் பட்டிருக்கிறேhம் என்பது புரியும் *

அற்புதமான இந்த வாழ்க்கையை ஆண்டவன் நமக்குக் கொடுத்திருக்கிறhர். இந்த உலகில் இருக்கும் அத்தனை தலைசிறந்த விஞ்ஞானிகளும் ஒன்று கூடி முயற்சி செய்தால் கூட உருவாக்க முடியாத அற்புதமான ஓர் உடலை நமக்கு அவர் அளித்திருக்கிறார்* நாம் உண்ணும் உணவிலிருந்து உருண்டு கொண்டிருக்கும் இந்தப் பூமிப் பந்து வரை, நமக்காக இறைவன் கொடுத்திருக்கும் பாpசுகள் எத்தனை ? இதற்கெல்லாம் நாம் இறைவனுக்குத் தினம் தினம் நன்றி சொல்கிறேhமே..? நமது வேதத்தில் இருக்கும் ஆரம்பப் பாடங்களில் முக்கியமானது "நன்றியோடு இருக்கக் கற்றுக் கொள் என்பதுதான் "நமஹ" என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு அர்த்தம் "போற்றி" என்றhலும் இதை நன்றிப் பெருக்கோடுதான் உச்சரிக்க வேண்டும் *

ஆனால், உதட்டளவில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் என்று கணக்கிலெடுத்தால், அந்த வரிசையில் முதலில் நிற்பது "நன்றி."

ஒரு முறை, நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் ஏதோ கோளாறு ஏற்பட்டு, விமானம் தள்ளாட ஆரம்பித்தது. விமானப் பணிப்பெண், பயணிகளே.. பயப்படாதீர்கள்.. விமானத்தில் சின்னக் கோளாறுதான்.. விமானி சரிசெய்து, சமாளித்து விடுவார்.." என்று தைரியம் சொல்கிறார். நேரம் போகப் போக, விமானம் கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறhகப் பறக்க ஆரம்பிக்கிறது. அப்போது, "அன்பு நிறைந்த பயணிகளே, நமது திறமைமிக்க விமானி எவ்வளவோ முயற்சி செய்தும,; விமானத்தில் இருக்கும் கோளாறை நிவர்த்தி செய்ய முடியவில்லை. அதனால், இன்னும் சில நிமிடத்தில் விமானம் வெடித்துச் சிதறி விடப் போகிறது. Any way thank you for flying with our Airlines.. (எங்கள் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ததற்கு நன்றி) என்று சொல்லி, பயணிகளை அதோகதியாக விட்டு விட்டு விமானப் பணிப்பெண் பாராட்டை மாட்டிக் கொண்டு விமானியோடு வெளியே குதித்துவிட்டாளாம் நாமும் சில சமயம் சிலரிடம் சொல்லும் "நன்றி" பயணிகளுக்கு விமானப் பணிப்பெண் சொன்ன "நன்றி" மாதிரி வெறும் சம்பிரதாயமாக இருக்கிறது*

நன்றி சொல்வது எப்படி...?

இயந்திரத்தனமாக நாக்கிலிருந்து உச்சriக்கப்படுவது அல்ல நன்றி ஒரு இதயத்திலிருந்து இன்னொரு இதயத்துக்கு உணர்த்தப்படுவது உணர்வுபூர்வமாக ஒருவர் தனது நன்றியை தொpவிக்கும்போது. கும்பிடுவதற்காக தானாகவே கைகள் ஒன்று கூடும்.. உதடுகள் துடிக்கும்.. கண்களில் நீர்த்துளி பனிக்கும்...

இது ஜென் புத்திசத்தில் உள்ள ஒரு கதை * ஜப்பான் நாட்டில் உண்மையில் நடந்த கதை இது -

சிறிய ஓட்டல் ஒன்றுக்கு முதலாளி அவர். காலையில் எழுந்தால் இரவு படுக்கப் போகும் வரை. அவருக்கு ஓட்டல் வேலை சரியாக இருக்கும் என்றhலும், அவர் மனம் மட்டும் ஆன்மீகத்திலேயே மையம் கொண்டிருந்தது. ஒரே ஒரு ஜென் மதத் துறவியையாவது தரிசிக்க வேண்டும் என்பது இந்த ஓட்டல் முதலாளியின் தீராத ஆசை. ஆனால், துறவியைத் தேடிப் போகக் கூட அவரது வேலைப்பளு அனுமதிக்கவில்லை * ஓட்டல் முதலாளியின் விருப்பம் ஓட்டல் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, வழக்கமான வாடிக்கையாளர்களுக்குக் கூடத் தெரியும் *

ஜென் துறவிகள் மற்ற மதத் துறவிகள் போல காவி உடையோ அல்லது சாமியார்களுக்கென்று ஒரு பிரத்தியேகமான உடையோ வடிவமைத்து அணியமாட்டார்கள் * ஒரு சராசரி ஜப்பானியனைப் போன்றுதான் ஜென் மதத் துறவிகள் உடை அணிவார்கள். அதனால் ஜென் மதத் துறவி யார், சாதாரணக் குடிமகன் யார் என்று வேறுபடுத்திப் பார்ப்பது கடினம். *

ஒரு நாள் வழக்கம்போல், நமது ஓட்டல் முதலாளி மூச்சு விடக் கூட முடியாத அளவுக்கு ஒரே பிஸி என்றாலும், இடையில் கிடைக்கும் ஒரு சில நிமிடங்களை விரயமாக்காமல் ஓட்டலில் யார் சாப்பிடுகிறhர்கள்..? என்ன சாப்பிடுகிறhர்கள்..?" என்று கவனிப்பது இவரது வழக்கம். வழக்கம்போலவே நமது ஓட்டல் முதலாளி, அன்று உணவருந்திக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் பக்கம் பார்வையைத் திருப்பினார். அங்கே இரண்டு பேர் டீ அருந்திக் கொண்டிருந்தார்கள். ஓட்டல் முதலாளிக்கு உற்சாகம் பிடிபடவில்லை. "நான் இத்தனை வருடமாகக் காத்துக் கொண்டிருந்த ஜென் துறவிகள,; கடைசியில் என் ஓட்டலுக்கே வந்து விட்டார்கள்.." என்று உற்சாக கூச்சலோடு ஓடினார். டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த இருவரும் உண்மையிலேயே ஜென் துறவிகள் என்பதால், அவர்கள் ஓட்டல் முதலாளியின் ஆர்வத்தைப் பார்த்து, அவரைத் தங்களின் சீடராக ஏற்றுக் கொண்டார்கள் * தனது மகனிடம் ஓட்டலை ஒப்படைத்து விட்டு ஜென் துறவிகளின் பின்னால் நடக்கத் துவங்கிய மாஜி ஓட்டல் முதலாளியைப் பார்த்து வாடிக்கையாளர்கள் கேட்டார்கள். "அவர்கள் துறவிகள் என்று நீங்கள் எப்படிக் கண்டு கொண்டீர்கள்..."

துறவிகளின் பின்னே நடந்தபடியே, மாஜி ஓட்டல் முதலாளி இப்படிப் பதில் சொன்னார். "இவர்கள் டீ அருந்திய விதத்தைப் பார்த்தே அடையாளம் கண்டு கொண்டேன். மரியாதையோடு இரண்டு கைகளாலும் டீக்கோப்பையைப் பற்றுவதிலிருந்து அதை நன்றி பெருக்கோடும் வாஞ்சையோடும் குடிப்பது வரை அவர்கள் தங்கள் அன்பைப் பிரதிபலித்தார்கள் *"

இந்த மாஜி ஓட்டல் முதலாளி, பிற்காலத்தில் ஒரு ஜென் துறவியாக மாறினார். அது மட்டுமல்ல, தன்னுடைய ஞானக் கண்களைத் திறந்த துறவிகளின் நினைவாக அவர் "ஜென் டீ மெடிட்டேஷன்" என்ற ஒரு நவீனத் தியான முறையையும் இந்த உலகுக்கு வழங்கினார். சாp, "ஜென் டீ மெடிட்டேஷன்" என்றhல் என்ன..? நீங்கள் யூகித்தது சாpதான்.. "ஒரு கோப்பை டீயை நன்றிப் பெருக்கோடு ருசித்து, அனுபவித்து காதலோடு குடிப்பதுதான் ஜென் டீ மெடிட்டேஷன் * ஜப்பான் நாட்டில் ஜென் டீ திருவிழா ((Zen Tea Ceremony)) என்று இப்போதும் கூட நடக்கிறது * அந்தத் திருவிழாவில் அந்த நாட்டு மக்கள் ஒரு சாதாரண டீயை இரண்டு கைகளிலும் ஏந்திக் கொண்டு நன்றிப் பெருக்கோடும் வழிந்தோடும் காதலோடும் உணர்வுபூர்வமாக அருந்துவார்கள்.

ஜப்பானியர்கள் நன்றியோடு இருக்க, ஆண்டவன் அவர்களுக்கு டீ மட்டுமல்ல.. இன்னும் பல நல்ல விஷயங்களைக் கொடுத்திருக்கிறhன். ஆனால், நான் இறைவனுக்கு நன்றி சொல்ல இறைவன் பசியையும் ஏழ்மையையும் தவிர எனக்கு என்ன கொடுத்திருக்கிறhன்..? என்று நம்மில் சிலர் கேட்கக் கூடும்.

இந்தக் கேள்விக்கு சுஃபி மதம் பதில் சொல்கிறது...

இஸ்லாமிய மதத்தில் சுஃபி என்று ஒரு பிரிவு உண்டு. அப்படிப்பட்ட ஒரு பிரிவின் துறவி, தனது சீடர்களோடு ஒரு காட்டின் வழியாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறார். மண்டையைப் பிளக்கும் வெயில் செருப்பில்லாத கால்களை முட்கள் கொடுமைப்படுத்துகின்றன. எதையும் பொருட்படுத்தாது அந்தத் துறவி, காட்டின் வழியே நடந்து போய்க் கொண்டிருக்கிறhர். வழியில் தானம் கேட்டுப் பசியாறுவதற்கோ அல்லது தாகத்தைத் தீர்க்கத் தண்ணீர் குடிப்பதற்கோ எந்த வசதியும் இல்லை *

மெள்ள இரவும் வருகிறது. துறவியும் அவரது சீடர்களும் எந்த உணவும் சாப்பிடாமலேயே தூங்குவதற்காக ஆயத்தமாகிறhர்கள். அப்போது அந்த சுஃபி துறவி, ஓ ஆண்டவனே * நீ இன்று எனக்குக் கொடுத்த எல்லாவற்றுக்கும் உனக்கு நன்றி.. என்று சத்தமாக வாய் விட்டு பிரார்த்தனை செய்ய, பசியால் வதைந்து கொண்டிருக்கும் சீடர்களுக்குக் கோபம் வந்து விடுகிறது. கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவர்க்ள துறவியைப் பார்த்துக் கேட்கிறhர்கள்- ஆண்டவன் இன்று நமக்கு எதுவுமே கொடுக்கவில்லை.. ஆனால், நன்றி என்று பிரார்த்தனை செய்தீர்களே.. அதன் அர்த்தம் என்ன..?

சுஃபி துறவி சிரித்துக் கொண்டே சொன்னார் ஆண்டவன் இன்று நமக்கு எதுவுமே கொடுக்கவில்லை என்று யார் சொன்னது..? தன் குழந்தைக்கு என்ன கொடுக்கலாம்..? என்ன கொடுக்கக் கூடாது..? என்று எப்படி ஒரு தாய்க்குத் தெரியுமோ, அதே போல நமக்கு இன்று எது கொடுக்கவேண்டும்... எது கூடாது..? என்று இறைவனுக்குத் தெரியும். ஆண்டவன் இன்று நமக்குப் பசியைக் கொடுத்திருக்கிறhர். அவர் எது செய்தாலும் சரியாகத்தான் செய்வார் அதனால்தான் அவருக்கு நன்றி சொன்னேன்

யார் குற்றவாளி ?

பார்க்கும் சக்தி என்பது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆனால் நாம் நமது கண்களின் முழு அருமையையும் உணருவது கிடையாது. கண்களைப் பார்ப்பதற்கு பயன்படுத்துவதைவிட தூங்குவதற்கு அதிகம் பயன்படுத்துகிறவர்கள் உண்டு. கண்கள் திறந்திருக்கும்போதே எதிரில் தெரியும் காட்சியைச் சரியாகப் பார்க்காமல் கனவுலகில் சஞ்சரிப்பபவர்களுக்கும் உண்டு *

சரி.. தூங்கவும் இல்லை * கனவும் காணவில்லை அப்போதாவது எதிரில் தெரியும் காட்சி, நம் கண்களுக்கு உள்ளது உள்ளபடி தெரிகிறதா ? அதுவும் பலருக்குத் தெரிவதில்லை. கண்ணிலே ஏதாவது ஒரு கலர் கண்ணாடி மாட்டிக் கொண்டு பார்ப்பவர்கள் அதிகம். கலர் கண்ணாடி என்று நான் குறிப்பிடுவது அவரவரது Perception உறவினர்கள,; நண்பர்கள், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், அறிந்தவர்கள,; தெரிந்தவர்கள் விஷயங்களைப் பார்ககும்போது எந்தவித முழுமையான ஆதாரமும் இல்லாமல் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் அபிப்பிராயங்கள் தான் Perception

நிர்வாக இயல் வொர்க் - ஷாப்களில் ஒவ்வொருவரின் Perception எப்படி இருக்கிறது என்பதைப் புரியவைக்க சின்ன சின்ன புதிர்கள் போடுவார்கள். அதிலிருந்து உங்களுக்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்.

ரோமானிய முறைப்படி ஒன்பது என்பதை IX என்று எழுதுவோம் இல்லையா ? இதில் எங்கேயாவது ஒரே ஒரு கோடு மட்டும் சேர்த்து இந்த ஒன்பதை ஆறு என்று மாற்ற வேண்டும் கட்டுரையை மேலே படிப்பதற்கு முன்பு இரண்டு நிமிடம் செலவு செய்து ஒரே ஒரு கோடு போட்டு ஒன்பதை ஆறாக மாற்றுவது உங்களால் முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள்.

விடை இதுதான்

IX என்பது ரோமானிய முறைப்படி ஒன்பது சரி. இதையே ஆங்கில எழுத்துக்களாக நினைத்துக் கொண்டு இரண்டாம் முறை பாருங்கள் I மற்றும் Xஎன்ற இரு எழுத்துக்கள் தெரிகிறதா ? அதன் முன்னால் s என்ற ஆங்கில எழுத்தைச் சேருங்கள்.

ஆகா.. ஒன்பது ஆறாகிவிட்டது *

ஒரு கோடு மட்டும் சேர்க்கலாம் என்று சொன்னவுடன் நம்மில் பலருக்கு நேர்க்கோடுதான் நினைவுக்கு வரும் ஏன்.. Sஎன்பது வளைவான ஒரே கோடுதான். ஆனால் அது சிலருக்கு அப்படி நினைவுக்கு வருவதில்லை. சிலருக்கு இது சட்டென்று தோன்றிவிடும். விடுகதைக்கு விடை கண்டுபிடிக்க Perception எப்படி நமக்குத் தடையாக இருக்கிறதோ அதே மாதிரிதான் கண்ணுக்கு எதிரே தெரியும் காட்சிகளின் உண்மையான பின் அர்த்தங்களையும் இந்த நமக்கு நிறம் மாற்றிக் காட்டிவிடும்.

இந்தக் கதையைப் பாருங்கள்..

அது கொடிய விலங்குகள் நிறைந்த பயங்கர காடு * அங்கே ஒரு விறகு வெட்டி * அவனுக்கு ஒரு மனைவி * அவள் ரொம்பவும் அழகானவளும் ஆனால், விறகு வெட்டும் நேரம் போக மீதி நேரம் எல்லாம் குடித்து விட்டு தன் மனைவியை அடிப்பதுதான் அவனுக்கு வேலை * மனைவிக்கோ நாளுக்கு நாள் வாழ்க்கை கசந்துபோய்க் கொண்டிருந்தது. கணவன் வெட்டிப் போடும் விறகுகளை பரிசலில் ஏற்றிக் கொண்டு ஆற்றின் மறுகரைக்குப் போய் விற்று அதில் கிடைக்கும் காசிலிருந்து அரிசி, பருப்பு வாங்கி வந்து வீட்டில் சமையல் செய்ய வேண்டும். இதுதான் அவளது அன்றhட வேலை. காலப்போக்கில் எதிர்க்கரையில் இருந்த மளிகைக்கடைக்காரனுக்கும் விறகு வெட்டியின் மனைவிக்கும் மௌ;ள ஒரு நட்பு துளிர்த்து வளர ஆரம்பித்தது.

அன்று அமாவாசை. வழக்கத்தைவிட அதிகமாகக் குடித்து விட்டு வந்த விறகுவெட்டி, மனைவியைக் கொடூரமாக அடித்து உதைத்துக் கொடுமை படுத்த ஆரம்பித்தான். இவனிடம் பட்;ட அவஸ்தைகள் போதும் என்று மனைவி அந்த நட்ட நடு இரவில் வீட்டை விட்டு வெளியே வருகிறhள். அப்போது அவள் மனதில் கரைக்கு அந்தப் பக்கம் இருக்கும் மளிகைக் கடைக்காரனிடம் போய் விடலாம் என்று ஆற்றைக் கடக்க பரிசல் வேண்டும் விறகு வெட்டியின் மனைவி பரிசல்காரனைப் போய் எழுப்புகிறாள். பரிசல்காரனோ இவளுக்காகத் தன் தூக்கத்தைத் தியாகம் செய்யத் தயாராக இல்லை.

பரிசல் இல்லை என்றால் என்ன ? இரண்டு மைல் தூரம் ஆற்றோரமாக நடந்தால் ஆற்றின் குறுக்கே ஒரு மரப்பாலம் இருக்கிறது. அதன் வழியாகப் போய்விடலாம்ஞஎன்று இவள் நினைக்கிறhள். மரப்பாலத்தின் அருகே சிறுத்தை ஒன்று உலவுவதாகப் பலர் சொன்னது இவளின் நினைவுக்கு வருகிறது என்றhலும் அதைப் பற்றி கவலைப்படாமல் அவள் மரப்பாலம் நோக்கி நடக்கிறhள் *

அடுத்த நாள் காலை புலியால் தாக்கப்பட்டு சின்னாபின்னமாக மரப்பாலத்தின் அருகே அவள் உடல்.

இந்தக் கதையை உங்கள் வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் படித்துக் காட்டுங்கள். கடைசியில் விறகு வெட்டியின் மனைவி சாவுக்கு யார் காரணம் என்று தனித்தனியே கேட்டுப் பாருங்கள்.

நாசமாகப் போன அந்தக் குடிகார விறகு வெட்டிதான் * என்பர் ஒருவர். இன்னொருவர் ஒழுக்கம் கெட்ட விறகு வெட்டியின் மனைவி, தானே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டாள் * என்பார். மூன்றாமவர், உதவிக்கு வரமறுத்த இரக்கமற்ற பரிசல்காரன் என்பார் * விறகு வெட்டியின் மனைவியைத் தவறான நடத்தைக்கு ஈர்த்த மளிகைக்கடைக்காரன் தான் குற்றவாளி என்றும் யாராவது சொல்லக் கூடும் ஒரே கேள்விக்கு ஏன் இத்தனை விடைகள் ? ஏனென்றால் எல்லோருக்கும் ஒவ்வொரு Perception
நள்ளிரவில் ஓங்கி உயர்ந்து நிற்கிற ஓர் அரசமரத்தின் அடியிலிருந்து நிமிர்ந்து பார்க்கிறபோது உங்களுக்கு முதலில் அதன் கிளைகள் தொpயலாம். இலைகள் தொpயலாம் அதையெல்லாம் ஊடுருவிப் பார்க்கிற போதுதான் இலைகளுக்கு அப்பால் மறைந்திருக்கிற நிலாவின் பிரகாசம் தெரியும்.

அதுபோல் எந்த விஷயத்திலுமே எடுத்த எடுப்பில் உங்கள் Perceptionஒரு மனிதன் அல்லது அவனது செயல் மீது படிந்து. உண்மைக்கு மாறான தோற்றத்தையும் ஏற்படுத்தும்.

அந்த முதல் பார்வையை மனதுக்குள் வாங்காமல், நிதானத்தோடு விருப்பு வெறுப்புகள் இல்லாமல் தெளிவான மனநிலையில் அதே காட்சியை மீண்டும் அசைபோட்டுப் பார்த்தால்தான் பார்த்ததன் உண்மை உங்களுக்கு புரியும்.

Wednesday, October 22, 2008

சிந்தனைக் கதவுகளை மூடாதீர்

சிந்தனைக் கதவுகளை மூடாதீர்

மனதில் சோர்வு. தாழ்வு மனப்பான்மை போன்றவை தலைதூக்கும் போதெல்லாம் அதை மறைக்க நான் ஜெயிக்கப் பிறந்தவன் நான் சாதிக்கப் பிறந்தவன்
என்று நமக்கு நாமே சொல்லி உற்சாகப் படுத்திக் கொள்வது அப்போதைக்குப் பலன் கொடுக்கலாம்/ ஆனால் இந்த பாஸிட்டிவ் திஙகிஙஞ அதிக நாளைக்கு உதவாது/

தீய எண்ணஙகள் எழும்போது ராமா... ராமா... என்று மனதுக்குள் சொல்லிக் கொள்ளுஙகள் என்று ஒரு சிலா யோசனை சொல்வாகள். பாஸிட்டிவ் திஙகிங என்பது ஏறக்குறைய இதே அடிப்படைதான் ! மனதில் சபலம் வரும்போது/ அதை அடக்கத் தெய்வத்தின் மீது சிந்தனையைத் திருப்புவது அந்தச் சமயம் பலன் தரும்/ ஆனால்/ அதே தீ எண்ணம் அடுத்த நாளோ/ அடுத்த வாரமோ மீண்டும் தலைதூக்குமே... அப்போதும் கடவுள் பேரைச் சொல்லித்தான் சபலத்தை அடக்க வேண்டுமா...

வீடு முழுதும் துர்நாற்றம். வீட்டின் ஒரு முலையில் எலி ஒன்று செத்துக் கிடக்கிறது/ அது எஙகே என்று தேடிக் கண்டுபிடித்து எடுத்து வெளியே தூக்கிப் போட நமக்குப் பொறுமை இல்லை ! ஆனால்/ துர்நாற்றத்தை மறைக்கக் கட்டுக்கட்டாக ஊதுவத்தி கொளுத்தி வைக்கிறோம்/ கொஞ்ச நேரத்துக்கு வேண்டுமானால் செத்த எலியின் நாற்றத்தை அது மறைத்து விடும்/ ஆனால்/ வத்தி எந்து முடிந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் நாற்றம் மீண்டும் குடலைப் பிடுஙகத் துவஙகிவிடும்!

பாஸிட்டிவ் திஙகிஙகும் இது மாதி தான் ! சார்... பாஸிட்டிவ் திஙகிஙகுக்கு மாற்று இருக்கிறதா... இருக்கிறது அதற்குப் பெயாதான் ரவாநவேஉ வாமேபே

நீஙகள் மிகவும் துன்பத்தில் இருக்கிறீகள் என்று வைத்துக் கொள்ளுஙகள். ஞஐயையோ நான்படும் துன்பத்தைச் சுற்றியே என் சிந்தனை சுழல்கிறதே...
என்று வெறுப்படைந்து ஞஇல்லை! நான் மகிழ்ச்சியோடுதான் இருக்கிறேன்ஞ
என்று பாஸிட்டிவ் திஙகிங என்ற சித்தாந்தத்தின் படி மாற்றுச் சிந்தனையைத் திணிக்க நீஙகள் முயற்சி செய்தால் மனதுக்குள் ஒரு போராட்டம் தான் உருவாகும்/ அதற்குப் பதிலாக/ உஙகளின் சிந்தனையை நீஙகளே சற்றுத் தள்ளி நின்று கவனிக்க ஆரம்பியுஙகள் !

இது கெட்ட சிந்தனை / இது நல்ல சிந்தனைஞஎன்பது மாதி சிந்தனைக்கு லேபிள் குத்தாமல்/ உஙகளின் சிந்தனை மீதே வெறுப்புக் காட்டாமல் நடுநிலையோடு கவனியுஙகள் !

துக்கமான சிந்தனையோ/ சபலமான சிந்தனையோ அல்லது மகிழ்ச்சியான சிந்தனையோ... அதை நீஙகளே விலகி நின்று பாக்கும் போது/ உஙகளுக்குள்ளே புந்து கொள்ளுதல் நடக்கும் !

இது போன்ற மனநிலையை எய்திவிட்டால் துன்பம்/ மகிழ்ச்சி இந்த இரண்டுமே ஒன்றுதான் ! மகிழ்ச்சி எப்படி ஓ அனுபவமோ/ அதே போல் துயரமும் ஓ அனுபவமே ! ஆனால்/ மனதிலே அமைதியும் தெளிவும் இல்லாத மனிதாகளுக்கு மகிழ்ச்சிகூடச் சோகமானதாக போய்விடும் !

அவா நடுத்தரப் பிரிவைச் சோந்தவா/ அவருக்கு ஆறு பெண்கள் ! எல்லோருமே கல்யாண வயதை அடைந்தவாகள்/ ஆறு பெண்களுக்கும் எப்படி திருமணம் செய்து வைப்பது/// என்று கவலைப்பட்டுக் கவலைப்ட்டே அவருக்கு ஒரு நாள் மாரடைப்பு வந்து விடுகிறது/ அவரை மருத்துவமனையில் சோக்கிறாகள்/ அந்த நேரம் பாத்து/ அவா வாஙகி வைத்திருந்த ஒரு பரிசுச் சீட்டுக்குப் பத்து லட்ச ருபாய் விழுகிறது ! இந்த மகிழ்ச்சியான செய்தியை அவரிடம் சொன்னால்/ அவருக்கு மீண்டும் மாரடைப்பு வந்துவிடுமோ...... என்று பயந்த மனைவி/ டாக்டரைவிட்டே இந்தச் செய்தியைத் தன் கணவரிடம் பதமாகச் சொல்லச் சொல்கிறாள் !

டாக்டா மனோதத்துவ முறையில் காஷுவலாக அவளது கவணவரிடம் பேச்சை ஆரம்பிக்கிறா/

உஙகளுக்கு லாட்டாயில் ஒரு லட்சம் பாசு விழுந்தால் என்ன செய்வீகள்.....

நான் என் முத்த பெண்ணுக்குத் திருமணம் செய்து விடுவேன்....

சார்/ இரண்டு லட்சம் விழுந்தால்..

இரண்டாவது பெண்ணுக்கும் கல்யாணம் முடித்து விடுவேன்

சார்... பத்து லட்சம் விழுகிறது என்று வைத்துக் கொள்ளுஙகள் !

எனக்கெல்லாம் எஙகே டாக்டா பத்து லட்சம் விழும் அப்படி ஒரு வேளை விழுந்தால்/ சத்தியமாக உஙகளுககு இரண்டு லட்சம் தந்து விடுவேன்/

எதி ர்பாராத இந்த இன்ப அதிச்சியில் டாக்டருக்கு ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டா!

மகிழ்ச்சி எப்படி ஒரு சுவையோ/ அதே மாதி துயரமும் ஒரு சுவை இந்தச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்வது கஷ்டமாகக்கூட இருக்கலாம் ! நான் சிறுவனாக இருந்தபோது என் அம்மா பாகற்காயை விரும்பிச் சாப்பிடுவார்/ அப்போது/ கசப்பான ஒரு பொருளை அம்மா எப்படி ரசித்துச் சாப்பிடுகிறா என்று எனக்கு ஒரே குழப்பம்.../ ஆனால்/ மனதுக்குப் பிடித்துவிட்டால் இனிப்பு என்பது எப்படி சுவையோ/ அதே போல கசப்பும் ரசிக்கக் கூடிய ஒரு சுவைதான் என்பதை உணாந்து கொண்டேன் !

சிறுபிள்ளையாக இருக்கும் போது/ இனிப்பு ஒன்றுதான் சுவை. கசப்பு/ துவர்ப்பு/ புளிப்பு எல்லாம் சுவை இல்லை/ என்று நமக்கு நாமே. முடிவெடுத்துக் கொண்டு/ சிந்தனையின் கதவுகளை மற்ற சுவைகளுக்கு இடம் தராமல் எப்படி மூடிவிடுகிறோமோ/ அதே மாதிதான் இந்த விஷயமும். மகிழ்ச்சி மட்டும்தான் நல்ல உணாச்சி மற்றது எல்லாம் வெறுக்கத்தக்க உணாச்சிகள் என்று எண்ணி/ வாழ்க்கையில் நாம் அநேக உணாச்சிகளுக்குக் கதவைத் திறப்பபதில்லை!

இப்படி எந்தச் சிறையிலும் அடைபடாமல் தள்ளி நின்று சிந்தனையைக் கவனிக்கும் போது/ மனது தானாகவே அமைதி அடையும்/ திரைகள் விலகும்/ உண்மைகள் புயும்/ வாழ்க்கை அழகாக. அற்புதமானதாக- ஒரு மலரைப் போல மௌனமாக/ மென்மையாக வியும்!

Tuesday, October 21, 2008

டென்ஷன் டென்ஷன்

டென்ஷன் டென்ஷன்..!

நரம்புகள் விம்மிப் புடைக்கும் அளவுக்குச் சில நிகழ்ச்சிகள் நம்மை டென்ஷனாக்கி விடுகின்றன. பல சமயத்தில் படபடப்பு உச்சக்கட்டத்துக்குப் போய் கைகால்களெல்லாம் உதற ஆரம்பித்து விடுகின்றன ! இன்னும் சில சமயம் இரண்டடி தள்ளி நிற்பவனுக்குக் கேட்கும் அளவுக்குக்கூட நம் இதயம் வேகமாகத் துடிக்கிறது ! ஏதோ இனம் புரியாத கவலைக் கடலுக்குள் மூழ்குவது போன்ற பீதி நம் நெஞ்சைக் கவ்விக்கொள்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் டென்ஷன் !

பல சமயஙகளில் நாம் டென்ஷன் ஆவதே தேவையில்லாத விஷயஙகளால்தான் ! உதாரணத்துக்கு ஒரு சம்பவம்.. .

ஞபேராசிரியர் ஒருவர் மாற்றலாகி வேறு ஊரிலிருக்கும் கல்லுரிக்குப் போகிறார். அவரை வழி அனுப்புவதற்காக அவருடன் பணிபுரியும் நான்கு பேராசிரியர்களும் ரயில் நிலையத்துக்கு வந்திருக்கிறார்கள். ரயில் புறப்பட கொஞ்சம் நேரம் இருக்க.. . பேராசிரியர்கள் பிளாட்பாரத்தில் நின்று ஜாலியாகக் பேச ஆரம்பிக்கிறார்கள். பேச்சு சுவாரஸ்யத்தில் ரயில் நகர ஆரம்பித்துவிட்டதையும் அவர்கள் கவனிக்கவில்லை. சடாரெனப் படபடப்பு வந்துவிடுகிறது. எந்த கம்பார்ட்மெண்ட்டில் ஏறினாலும் பரவாயில்லை.. . அடுத்த ஸ்டேஷனில் சரியான கம்பார்ட்மெண்ட்டுக்கு வந்துவிடலாம்ஞ என்று நெரிசலில் முட்டிமோதி நான்கு பேராசிரியர்கள் எப்படியோ ரயிலேறி விடுகிறார்கள். ஆனால்/ கையில் பெட்டி படுக்கையுடன் இருந்த ஒரு பேராசிரியரால் மட்டும் ரயிலில் ஏற முடியவில்லை ! அவரைப் பார்த்துப் பரிதாபப்பட்ட போர்ட்டர் ஒருவர்/ ஞகவலைப்படாதீர்கள்.. . பத்து நிமிடத்தில் இன்னும் ஒரு ரயில் இருக்கிறது. அதிலே நீஙகள் போய்விடலாம்ஞ என்று ஆறுதல் வார்த்தைகள் சொல்கிறார்.

அதற்கு அந்தப் பேராசிரியர்/ ஞஅடுத்து பத்து நிமிடத்தில் இன்னொரு ரயில் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால்/ நான் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. என் சக பேராசிரியர்களை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது. காரணம்/ அவர்கள் என்னை வழியனுப்ப வந்தவர்கள். ஆனால்/ இஙகே ஏற்பட்ட அமளி துமளியில் அவர்கள் ரயிலில் ஏறிவிட்டார்கள் !ஞ என்றார். இப்படித்தான் படபடப்பும் டென்ஷனும் சாதாரண விஷயஙகளைக்கூட நம் கண்ணிலிருந்து மறைத்து விடுகின்றன ! நாம் பதட்டத்தில் இருக்கும்போது/ எத்தனை கஷ்டப்பட்டு ஒரு வேலையைச் செய்தாலும் சரி/ அதனால் ஏற்படும் பலன் பெரும்பாலும் பூஜ்யமாகத்தான் இருக்கும் !

ஒரு சமயம் நான்கு குடிகாரர்கள் ஒன்றாக மது அருந்தப் போனார்கள். போதை தலைக்கேறும் மட்டும் குடித்த அவர்கள்/ வீட்டுக்குத் திரும்புவதற்காகப் புறப்பட்ட நேரத்தில் நன்றாக இருட்டிவிட்டது. ஆற்றைக் கடந்துதான் மறு கரைக்கும் போக வேண்டும் ! எனவே பரிசல்காரனைத் தேடினார்கள். அவனைக் காணவில்லை. ஆனால் பரிசல் மட்டும் இருந்தது. பரிசலைத் தாஙகளே ஓட்டிச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில்/ பரிசலில் ஏறி உட்கார்ந்து துடுப்புப் போட ஆரம்பித்தார்கள். ஒரு மணி நேரம் ஆனது.. . இரண்டு மணி நேரமானது.. . மூன்று மணி நேரமும் ஆனது ஆனால் மறுகரை மட்டும் வரவே இல்லை ! அதற்குள் மெள்ளப் பொழுதும் விடிந்து. .. போதையும் மெள்ளத் தெளிய.. . அப்போதுதான் கரையில் இருக்கும் மரத்தில் பரிசல் கட்டப்பட்டிருப்பதை அந்தக் குடிகாரர்கள் கவனித்தார்கள் !

குடிகாரர்கள் கண்களைப் போதையும் இருட்டும் மறைத்தது போல/ பதட்டம் நம்முடைய கண்களைப் பலசமயம் உண்மையையும் நிதர்சனத்தையும் பார்க்கவிடாமல் மறைத்துவிடுகிறது.

புத்த மதத்தில் ஒரு பிரிவாக விளஙகும் நுசூ இலக்கியத்தில் உள்ள ஒரு கதை இது !

ஒர் அரசர் தன் நாட்டுக்கு முதலமைச்சர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க நினைத்தார். சம தகுதிபெற்ற நான்கு பேர் அவரது அமைச்சரவையில் இருந்ததால்/ ஏதாவது ஒரு பரீட்சை வைத்து அந்த நால்வரில் ஒருவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்க முடிவெடுத்தார். ஒரு நாள் அந்த நால்வரையும் அழைத்து/ ஞஎன்னிடம் ஒரு பூட்டு இருக்கிறது. கணித முறைப்படி வடிவமைக்கப்பட்ட இந்த விஞ்ஞானப் பூட்டைத் திறக்க நாளை காலை உஙகள் நால்வருக்கும் ஒரு வாய்ப்பு வழஙகப்படும். யார் இந்தப் பூட்டைக் குறைவான நேரத்தில் திறக்கிறாரோ அவரே நாட்டின் முதலமைச்சர்ஞ என்று அறிவித்தார்.

முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில்/ அன்று இரவு முழுதும் விடிய விடியப் பூட்டு பற்றிய ஓலைச்சுவடிகளையும் கணிதம் பற்றிய எல்லாக் குறிப்புகளையும் அந்த அமைச்சர்கள் தேடினார்கள். எதுவும் கிடைக்கவில்லை. அந்த நால்வரில் ஒருவர் மட்டும்/ ஒரு சில ஓலைச்சுவடிகளைப் புரட்டிவிட்டுத் துஙகப் போய்விட்டார்.

மறுநாள் அரசவையில். . . கணிதத் தந்திரத்தால் மட்டுமே திறக்கக்கூடிய பூட்டை அரசரின் சேவகர்கள் துக்கிக் கொண்டு வந்து நால்வரின் முன்பும் வைத்தார்கள். எதிரே அரசர் வீற்றிருந்தார். பூட்டின் பிரமாண்டம் எல்லோரின் படபடப்பையும் இன்னும் அதிகரித்தது. கையோடு எடுத்து வந்த ஓலைச்சுவடிகளை அவர்கள் முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார்கள். ஆனால்/ கணிதப் பூட்டைத் திறக்கும் வழி மட்டும் அவர்களுக்குப் புலப்படவில்லை ! தோல்வியை ஒப்புக்கொண்டார்கள்.

இரவிலே நன்றாகத் துஙகிய அந்த ஓர் அமைச்சர்/ கடைசியாக எழுந்து வந்தார். அவர் பூட்டின் அருகில் வந்து பார்த்தார். என்ன ஆச்சரியம் ! பூட்டு பூட்டப்படவே இல்லை. சாவியே இல்லாமல்/ சூத்திரமே இல்லாமல் அவர் பூட்டை எளிதாகத் திறக்க/ அரசர் அவரையே முதலமைச்சர் ஆக்கினார்.
பிரச்னையைத் தீர்க்க வேண்டுமானால்/ முதலில் பிரச்சனையைப் புரிந்து கொள்ள வேண்டும். பிரச்சனையைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால்/ மனம் பதட்டம் இல்லாமல் சமன் நிலையில் இருக்க வேண்டும்.
--

Monday, October 20, 2008

manase

பேராசிரியர் ஒருவர் மாற்றலாகி வேறு ஊரிலிருக்கும் கல்லுரிக்குப் போகிறார். அவரை வழி அனுப்புவதற்காக அவருடன் பணிபுரியும் நான்கு பேராசிரியர்களும் ரயில் நிலையத்துக்கு வந்திருக்கிறார்கள். ரயில் புறப்பட கொஞ்சம் நேரம் இருக்க.. . பேராசிரியர்கள் பிளாட்பாரத்தில் நின்று ஜாலியாகக் பேச ஆரம்பிக்கிறார்கள். பேச்சு சுவாரஸ்யத்தில் ரயில் நகர ஆரம்பித்துவிட்டதையும் அவர்கள் கவனிக்கவில்லை. சடாரெனப் படபடப்பு வந்துவிடுகிறது. எந்த கம்பார்ட்மெண்ட்டில் ஏறினாலும் பரவாயில்லை.. . அடுத்த ஸ்டேஷனில் சரியான கம்பார்ட்மெண்ட்டுக்கு வந்துவிடலாம்ஞ என்று நெரிசலில் முட்டிமோதி நான்கு பேராசிரியர்கள் எப்படியோ ரயிலேறி விடுகிறார்கள். ஆனால்/ கையில் பெட்டி படுக்கையுடன் இருந்த ஒரு பேராசிரியரால் மட்டும் ரயிலில் ஏற முடியவில்லை ! அவரைப் பார்த்துப் பரிதாபப்பட்ட போர்ட்டர் ஒருவர்/ ஞகவலைப்படாதீர்கள்.. . பத்து நிமிடத்தில் இன்னும் ஒரு ரயில் இருக்கிறது. அதிலே நீஙகள் போய்விடலாம்ஞ என்று ஆறுதல் வார்த்தைகள் சொல்கிறார்.